அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

‘இல்லம் தேடி கல்வித் திட்டம்‘ ஆர்.எஸ்.எஸின் கல்விக் கொள்கையை திணிக்கும்: கி.வீரமணி எதிர்ப்பு

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   27 , 2021  11:08:13 IST

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு  திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இத்திட்டம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கையை பரப்பும் திட்டம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
 
கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு “இல்லம் தேடிக் கல்வி” என்னும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
 
அரசின் இந்த திட்டத்திற்கு திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது பள்ளிக் கல்வித் துறை  தெரிந்தோ, தெரியாமலோ 'பழைய கள் புதிய மொந்தை' என்பதுபோல் பல தனித்தனி அம்சங்களை நடைமுறைப்படுத்துவது போன்ற சில ஆணைகளைப் பிறப்பித்திருப்பது மிகுந்த வேதனையைத் தருவதாக உள்ளது. அதிர்ச்சியாகவும் உள்ளது.
 
'இல்லம் தேடி கல்வித் திட்டம்' என்பது ஆர்.எஸ்.எஸ். பாராட்டும் அதன் கல்விக் கொள்கையின் நுழைவே ஆகும்.‘‘கற்றல் - கற்பித்தல் பணியை மேற்கொள்ள ஒவ்வொரு ஊரிலும் உள்ள தன்னார்வத் தொண்டர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற தேசிய கல்விக் கொள்கை 2020 தெரிவிப்பதைத்தான் அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்த இல்லம் தேடி வரும் கல்வித் திட்டம் அமைந்திருக்கிறது. இதனை தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கூறியுள்ளது சுட்டிக்காட்டத்தகுந்தது.
 
‘‘இல்லம் தேடி கல்வித் திட்டத்தின்படி ஒன்று முதல் 5 ஆம் வகுப்புகளுக்குப் பாடம் கற்பிக்க, பிளஸ் டூ படித்தவர்களையும், 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு ஏதாவது ஒரு பட்டம் பெற்றவர்களைப் பயன்படுத்தலாம்'' என்று கூறியிருப்பது, யாரும் இதனைப் பயன்படுத்தி நுழைந்து, பிஞ்சுகளுக்குப் பாடம் என்ற பெயரில், மத நஞ்சுகளைக்கூட விளைவிக்கவே இந்த சர்க்கரைப் பூச்சுள்ள விஷ (ஆர்.எஸ்.எஸ்.) உருண்டை என்றே கூறி முன்பே எதிர்த்தோம்.
 
அதற்குத் தமிழ்நாடு கல்வித் துறை தலையாட்டலாமா?ஏற்கெனவே, நவீன குலக்கல்வித் திட்டமான ஒன்றிய அரசின் புதிய கல்வித் திட்டத்தை நிராகரித்த தமிழ்நாடு அரசு, அதற்கு மாற்றாக தமிழ்நாடு கல்விக் கொள்கையை உருவாக்க ஓர் உயர்நிலை வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப் பட்டுள்ளது. அந்த நிபுணர் குழு விரைவில் அமைக்கப்பட்டு, அதற்கு குறிப்பிட்ட கால அளவீடும்கூட நிர்ணயித்து, அதன் பிறகே பரிந்துரைகளை செயல்படுத்தலாம்.
 
கல்வித் திட்டம் நமது பிள்ளைகள் வருங்கால வளர்ச்சித் திட்டம் என்பதால், இதில் அவசரக்கோலம்; அள்ளித் தெளித்த நிலை தவிர்க்கப்படுதல் அவசியம். கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் திரும்பக் கொண்டுவர அனைத்து முயற்சிகளையும் தயக்கமில்லாமல் செய்வது ஒரு தொலைநோக்கு என்றாலும், கருணாநிதி கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தைப் போன்று, மாநிலத்தின் கல்வி இன்னமும் ஒத்திசைவுப் பட்டியலில்தான் (கன்கரண்ட் லிஸ்ட்) இருக்கிறதே தவிர, ஒன்றிய அரசின் பட்டியலாகி விடவில்லை.
 
ஆனால், பா.ஜ.க. அரசு இந்தக் கல்வித் திட்டங்கள், மருத்துவ விவசாய கூட்டுறவு சட்டங்கள் மூலம் நாளும் செய்வது யதார்த்தத்தில் மாநில உரிமைகளைப் பறித்து விடுவதாக உள்ளது! இதில் முதல் பலி, கல்வி, மருத்துவம்; எதில் ‘திராவிட மாடல்' ஆட்சி சாதனை சரித்திரம் படைத்ததோ, அதனைக் குறி வைக்கும் நிலை. எனவே, உடனடியாக இதுபற்றி தமிழ்நாடு அரசும், நமது முதலமைச்சரும் உரிய அவசர நடவடிக்கைகளை எடுத்து, தமிழ்நாட்டு மாணவர்களை - கல்வியால் அவர்களது எதிர்காலம் ஒளிமயமாக்கிட அத்துணை முயற்சிகளிலும் ஈடுபடவேண்டியது அவசர அவசியமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...