???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது: சத்யபிரத சாகு 0 சோனியா காந்தி - சந்திரபாபு நாயுடு ஆலோசனை 0 தென்னிந்தியாவில் கர்நாடகத்தை தவிர மற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை: கருத்து கணிப்பு 0 வில்லனை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாது : கமல் கருத்து 0 "வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றப் போவதற்கான அறிகுறிகளே கருத்துக் கணிப்பு முடிவுகள்": மமதா 0 தமிழகத்தில் வெல்லப்போவது யார்? 0 மத்தியில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: கருத்துக்கணிப்பு முடிவுகள்! 0 நாடு முழுவதும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது; 60.21 சதவீத வாக்குகள் பதிவு! 0 பிரதமரின் கேதர்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்: திரிணாமூல் புகார் 0 வெளி மாநிலங்களில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்க: ஸ்டாலின் 0 நாளை கடைசி கட்ட வாக்குப்பதிவு! 0 நீர் திருட்டைத் தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?: நீதிமன்றம் கேள்வி 0 பரபரப்பான அரசியல் சூழலில் ராகுல்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு! 0 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி! 0 சிறப்பான செய்தியாளர் சந்திப்பு: மோடி குறித்து ராகுல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கூத்துப்பட்டறை ந. முத்துசாமி!- நாடகமே மூச்சு!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   25 , 2018  00:12:59 IST


Andhimazhai Image

தமிழின் முன்னோடி நாடக ஆளுமைகளில் ஒருவரான ந.முத்துசாமி உடல்நலக் குறைவால் சென்னையில்  காலமானார். அவருக்கு வயது 83.

தஞ்சை மாவட்டம் புஞ்சை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். சென்னையில் கூத்துப்பட்டறையை நிறுவி நாடகக் கலைஞர்களையும், சினிமா நடிகர்களையும் உருவாக்கியவர். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் அழிக்க முடியாத அடையாளமாக்கியதில் ந.முத்துசாமிக்குப் பெரும் பங்குண்டு. இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பான ‘நீர்மை’ மூலம் சிறந்த சிறுகதையாளராகவும் விளங்கிவருகிறார் இவர்.

ந.முத்துசாமியின் அரை நூற்றாண்டு நாடக ஆக்கங்கள் ந.முத்துசாமி நாடகங்கள் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது. 21 நாடகங்களைக் கொண்டு, ஆயிரம் பக்கங்களுக்கு மேல் கொண்ட பெருந்தொகுப்பு இது.

2012 ஆம் ஆண்டில் இவரது கலைச்சேவையை பாராட்டும் வண்ணம் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி பெருமைப்படுத்தியது.

விஜய் சேதுபதி, விமல், விதார்த், தினேஷ், குரு சோமசுந்தரம், பசுபதி, கலைராணி உள்ளிட்ட பலரும் ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள். நாடகக் கலையைப் பொறுத்தவரையில் முத்துசாமி ஓர் இயக்கமாக வாழ்ந்தார்.

அற்புதமான மனிதர். அவரது சிரித்த முகமும் அலாதியான குரலும், கைளை வீசிப் பேசும் பாணியும் மிகவும் வசீகரமானது.தமிழ் நவீன நாடகத்திற்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கியவர் முத்துசாமி.தெருக்கூத்தினைத் தமிழர்களின் அடையாளமாக உயர்த்திப்பிடித்தவர், என்று தன் அஞ்சலியில் குறிப்பிட்டுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன்.

ஒரு சில தனிமனிதர்களின் இழப்பை ஒரு தலைமுறைதான் ஈடு செய்யவேண்டும். அப்படிப்பட்ட இணையற்ற சாதனையாளர் முத்துசாமி. அவர் இருந்தபோது செய்த கடமைக்கு ஒரு கலைஞனாக நன்றி எனக் கூறி உள்ளார் நடிகர் கமலஹாசன்.

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...