அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இனவெறி எதிர்ப்புக்கு ஆதரவுத் தெரிவிக்காத டி காக் அணியிலிருந்து நீக்கம்! 0 பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியவர்கள் மீது உபா வழக்கு- பாஜக தலைவர்! 0 பாஜகவை சேர்ந்த கல்யாண ராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 0 நாளை மாலை வெளியாகும் அண்ணாத்த படத்தின் ட்ரைலர்! 0 “வழக்கமான அலுவல் பணிகளை சர்ச்சையாக்குவது சரியானது அல்ல” - வெ.இறையன்பு 0 நீர்வீழ்ச்சியில் சிக்கிய தாய் மற்றும் குழந்தையைக் காப்பாற்றிய இளைஞர்கள்! 0 அதிகரிக்கும் கொரோனா தொற்று: சீனாவில் மீண்டும் ஊரடங்கு! 0 தீபாவளிக்கு இனிப்புகளை ஆவினிலேயே வாங்க வேண்டும் - வெ.இறையன்பு 0 அதிக நச்சு வாயுக்களை வெளியிடும் அனல்மின் நிலையங்கள் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்! 0 கிரிக்கெட் வீரார் ஷமிக்கு எதிரான அவதூறு பதிவுகள் நீக்கிய ஃபேஸ்புக் நிறுவனம்! 0 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைப்பு: அமைச்சர் சேகர்பாபு 0 “முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை திமுக செயல்படுத்தப்படவில்லை” - கமல்ஹாசன் 0 சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி 0 2022 சட்டப்பேரவை தேர்தல்: சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை கூட்டம்! 0 இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   16 , 2021  11:15:20 IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை முன்னாள் சட்டமன்ற அதிமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.சி வீரமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பாத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்தார்.
 
இந்நிலையில், சென்னை, ஜோலார்பேட்டை ஆகிய இடங்களிலும்,  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்துள்ள குருவிமலை கிராமத்தில் உள்ள கே.சி வீரமணி உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
சென்னை சாந்தோமில் உள்ள கே.சி.வீரமணி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல, அதிமுக ஒன்றிய செயலாளர் கர்ணல் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறுகிறது. வேலூர் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியில் உள்ள இவருடைய இல்லத்தில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது இவர் கே.சி.வீரமணிக்கு பினாமி என்று கூறப்படுகிறது.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மூக்கண்டப்பள்ளியில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான நட்சத்திர விடுதியிலும், இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மூக்கண்டப்பள்ளி பகுதியில் கே.சி.வீரமணிக்கு சொந்தமான நட்சத்திர விடுதி உள்ளது.
 
இந்நிலையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், 2016௨021 ஆண்டு காலத்தில் வருமானத்தை விட 654% சதவீதம் அளவுக்கு சொத்து குவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவர், தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும், முறைகேடாக அவர் பெயரிலும், அவரது 80 வயது தாய் பெயரிலும் சொத்துகளை சேர்த்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...