???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எதிரணி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்: தமிழச்சி தங்க பாண்டியன் 0 வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நடிகர் பிரகாஷ் ராஜ் 0 சென்னை - சேலம் 8 வழி விரைவு சாலை திட்டத்தை ரத்து செய்வோம்: மு.க.ஸ்டாலின் பேச்சு 0 பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மாற்றம் 0 வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை 0 தேர்தலை ஒத்திவைக்கக்கோரும் மூன்று வழக்குகளும் தள்ளுபடி! 0 ஏ.கே போஸ் வெற்றி பெற்றது செல்லாது: நீதிமன்றம் தீர்ப்பு! 0 பிரசவத்தில் குழந்தையின் தலை துண்டான சம்பவம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 0 அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு 0 தூத்துக்குடியில் தமிழிசை; சிவகங்கையில் எச்.ராஜா போட்டி! 0 வாரணாசியில் மோடி, காந்தி நகரில் அமித்ஷா: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகினார் கே.பாக்யராஜ்

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   03 , 2018  00:14:35 IST

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியை இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து கே.பாக்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது “மரியாதைக்குரிய தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும், என்னோட பணிவான வணக்கம். போட்டி இல்லாமல், அனைத்து உறுப்பினர்களோட ஏகோபித்த ஒப்புதலோட என்னை நம்ம சங்கத்துக்கு தலைவரா தேர்ந்தெடுத்தீங்க. நானும் சந்தோஷமா பொறுப்பு ஏத்துக்கிட்டு, மன சாட்சியோட நேர்மையா செயல் பட்றதா உறுதிமொழி ஏத்துக்கிட்டேன். எல்லாம் நல்லபடியாதான் போயிட்டிருந்தது.
 
திடீர்னு ‘சர்கார்' பட சம்பந்தமா சங்கத்துக்கு ஒரு புகார் வந்தது. அந்தப் புகாரை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உறுப்பினர்கிட்ட உண்மை இருப்பதா தெரிஞ்சதாலே, அவருக்கு நியாயம் வழங்க, பொறுப்பில் இருக்குற முக்கியமானவங்க எல்லாரையும் கலந்து ஆலோசிச்சு நடவடிக்கை எடுத்து, நல்லபடி நியாயமா அதை செயல்படுத்தவும் முடிஞ்சது. ஆனா, அதுல பல அசௌகரியங்களை நான் சந்திக்க வேண்டி வந்தது. அதுக்கு முக்கிய காரணம்னு நான் நினைக்கிறது தேர்தல்ல நின்னு ஜெயிக்காம, நான் நேரடியா தலைவர் பொறுப்புக்கு வந்ததுதான்னு நினைக்கிறேன். சங்கத்துல சில தவறான நடவடிக்கைகள் என் கவனத்துக்கு வந்தது. நிறைய விதிமுறைகளையும் மாத்தி அமைக்க வேண்டி இருக்கு. அதையெல்லாம் சரி செய்தால் ஒழிய, சங்கத்தோட பெயரையும் சங்க உறுப்பினர்களோட நலனையும் காப்பாற்ற முடியாதோன்னு தோணுது. அதை உடனடியா சரி செய்ய வேண்டியதை ஒரு எழுத்தாளனா என்னோட தலையாய கடமையா நினைக்கிறேன்.
 
அதுக்கு ஒரே வழி நான் உள்பட என்னை மாதிரியே போட்டி இல்லாம பதவிக்கு வந்த எல்லாருமே ராஜினாமா பண்ணிட்டு முறையா தேர்தல் நடத்தி, மறுபடியும் பொறுப்புக்கு வர்றதுதான். ஆனா மற்றவர்களை நிர்பந்திக்கும் உரிமை எனக்கு கிடையாது. சங்கம் இருக்கிற நிலைமையில, இப்ப தேர்தல் நடத்தறது, வீண் செலவுன்னு நிறையப்பேர் அபிப்ராயப்படலாம். ஆனா, சங்கமே வீணாபோறதைவிட செலவு வீணாகறது தப்பில்ல. என்னோட இந்த அபிப்ராயத்தை ஏத்துக்கிறவங்க ராஜினாமா செய்யலாம். அது எப்படி நடக்குதுன்னு பார்த்துட்டு, அதுக்கப்புறம் தேர்தலை நடத்த முடிவு பண்ணினா, நான் அதுல மீண்டும் தலைவர் பதவில முறையா நின்னு, மெஜார்ட்டி வாக்குகளுடன் ஜெயிச்சு பொறுப்பை ஏத்துக்கிட்டு, தொடர்ந்து கடமையோட செயல்பட்றேன்.
 
எனக்கு நேர்ந்த அசௌகர்யங்கள் என்ன? ஒழுங்கினங்கள் என்னாங்கறதை, சங்க நலன், நற்பெயர் கருதி நான் வெளியிட விரும்பல. அதோட, முருகதாஸிடம் நான் கெஞ்சியும் உடன் படாததாலே வேறு வழியே இல்லாம சன் பிக்சர்ஸ் போல ஒரு பெரிய நிறுவனத்தின், மிகப் பெரிய படமான ‘சர்கார்' படக் கதையை நான் வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இருந்தாலும் தவறு என உணர்ந்து சம்பந்தப்பட்ட சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கோருகிறேன். ஒத்துழைப்பு தந்த அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும் எனது பணிவான நன்றியை தெரிவிச்சுக்கிறேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...