???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சபரிமலை தீர்ப்புக்கு எதிரான வழக்குகள் விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு! 0 பாஜக ஆபத்தான கட்சியா என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்: ரஜினிகாந்த் பேட்டி 0 குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு திங்களன்று விசாரணை 0 தொழிலதிபர்கள் யாராவது பணத்தை மாற்ற வரிசையில் நின்றார்களா? ராகுல் கேள்வி 0 குரூப்-2 வினாத்தாளில் தந்தை பெரியார் அவமதிப்பு: டிஎன்பிஎஸ்சி வருத்தம் 0 ஏழு பேர் விடுதலை குறித்து கேட்டதற்கு `எந்த ஏழு பேர்’ என்று கேட்ட ரஜினி! 0 கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கிறது! 0 கஜா புயல்: மீனவர்களுக்கு எச்சரிக்கை! 0 குரூப் 2 வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம்: ஸ்டாலின் கண்டனம் 0 கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது! 0 மத்திய அமைச்சர் அனந்த் குமார் காலமானார் 0 கஜா புயல் சென்னை-நாகை இடையே கரையை கடக்கிறது! 0 சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்: இன்று முதல்கட்ட வாக்குபதிவு! 0 பணமதிப்பிழப்பும் ஜிஎஸ்டியும் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளின: ரகுராம் ராஜன் 0 ஜனவரியில் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கே.பாக்யராஜ் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள எழுத்தாளர் சங்கம் மறுப்பு

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   03 , 2018  00:17:32 IST

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக இருந்தவர் கே.பாக்யராஜ். சர்கார் கதை திருட்டு சம்பந்தமாக சர்ச்சை எழுந்த போது, அதை சிறப்பான முறையில் கையாண்டு, முருகதாஸ் - வருண் ராஜேந்திரன் இருவருக்கும் பிரச்னையை சுமூகம் செய்து வைத்தார்.
 
அதனைத் தொடர்ந்து இன்று காலையில் தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். மேலும் ராஜினாமா கடிதத்தையும் பத்திரிகையாளர் முன்னிலையில் வாசித்துக் காண்பித்தார். சங்கத்தில் நடக்கும் சில ஒழுங்கற்ற நடவடிக்கையால் இந்த முடிவு எனத் தெரிவித்தார். மீண்டும் தேர்தல் வைக்கும் போது போட்டியிடுவேன் என தெரிவித்தார்.
 
இதனைத் தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் மனோஜ்குமார், இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளார். அதில் "தங்கள் ராஜினாமாவை சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர். நீங்களே தலைவராகத் தொடர வேண்டும் என அனைவரும் ஒரு மனதாக தெரிவித்துள்ளனர்.
 
எனவே எப்போதும் போல தாங்களே தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகத் தொடர்கிறீர்கள் என்பதை இதன்மூலம் உங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்." எனக் குறிப்படப்பட்டிருந்தது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...