???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு 0 ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் 0 மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா! 0 நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு 0 சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை! 0 சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு 0 அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு 0 தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை 0 கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கர்நாடகத்தில் ஊழல்வாதிகளை அச்சுறுத்திய நீதிபதி வெங்கடாச்சலா காலமானார்!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   31 , 2019  02:14:25 IST


Andhimazhai Image
கர்நாடகத்தில் சாமானிய மக்களின் நாயகனாக திகழ்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வெங்கடாச்சலா தனது 90-வது வயதில் காலமானார்.
 
இவர் கோலார் மாவட்டத்தின் மிட்டூரில் பிறந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி பணியிலிருந்து கடந்த 1995-யில் ஓய்வு பெற்ற பிறகு, கர்நாடகத்தில் 2001-ஆம் ஆண்டு லோக் ஆயுக்தா அமைப்பின் தலைமை பொறுப்பை வெங்கடாச்சலா ஏற்றார்.
 
அப்போது, ஊழலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது அதிரடியான நடவடிக்கை எடுத்து அசத்தினார். அவரது திடீர் சோதனை, உடனடி நடவடிக்கைகளால் பொதுமக்களுக்கு லோக் ஆயுக்தாவின் வலிமையை அவர் உணர்த்தினார். 
 
நீதிபதி வெங்கடாச்சலா பதவியில் இருந்த ஐந்து வருடங்களும் பல்வேறு ஊழல்வாதிகள் மக்களின்முன் நிறுத்தப்பட்டனர். இதற்காக மக்களால் அவர் பெரிதும் விரும்பப்பட்டார். ஊழல்வாதிகளுக்கு எதிரான அவரது நடவடிக்கை மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது மட்டுமின்றி, ஊழல்வாதிகளுக்கும் அச்சமூட்டியது.
 
வெங்கடாச்சலா பதவியில் இருந்தபோது அதிரடி சோதனை நடத்தவும், காவல்துறையினரின் ஒத்துழைப்பும் லோக் ஆயுக்தா அமைப்புக்கு இல்லை. ஆனால், அதையும் மீறி அவரது நடவடிக்கைகள் தொடர்ந்தன. அப்போதைய கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவால் தெரிவு செய்யப்பட்ட வெங்கடாச்சலாவுக்கு முதல்வர் முழு சுதந்திரம் வழங்கினார். அவரது நடவடிக்கைகளில் முதல்வர் தலையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 2009-யில் பாஜகவிலும் இணைந்து சில காலம் வெங்கடாச்சலா செயல்பட்டிருக்கிறார்.
 
வயது முதிர்ந்த நிலையில், தனது மூன்று மகன்கள், ஒரு மகளோடு அவர் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை காலை சுயநினைவின்றி இருந்த அவரை மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு நீதிபதி வெங்கடாச்சலா காலமானதாக உறுதி செய்யப்பட்டது.
 
“மனசாட்சிக்கு உண்மையாக இருக்கவும், பலனை எதிர்பார்க்காமல் உழைக்கவும் எங்கள் தந்தை கற்றுக் கொடுத்தார்” என நீதிபதி வெங்கடாச்சலாவின் மகன் வழக்கறிஞர் சேஷாச்சலா உருக்கமாக கூறியிருக்கிறார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...