அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஜூன் 20- இந்திய கிரிக்கெட்டில் ஓர் ஆச்சர்ய தினம்!

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   20 , 2022  17:09:19 IST


Andhimazhai Image

ஜூன் 20, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான ஓர் நாள். வங்கப் புலியான சவுரவ் கங்குலியும், தடுப்பு சுவரான ராகுல் டிராவிட்டும் தங்கள் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் அறிமுகமான நாள் இது. ஆண்டு 1996. அதே போல் இன்னொரு சந்தர்ப்பத்தில் இதே ஜூன் 20 இல் 2011 ஆம் ஆண்டு அறிமுகமானவர் ரன் எந்திரமான விராட் கோலி. ஜூன் 20 ஏன் முக்கியமான நாள் எனத் தெரிகிறதா?

 
1996ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் 22 வயதே நிரம்பிய இரண்டு இளம் வீரர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். ஒருவர், கங்குலி, மற்றொருவர் டிராவிட்.
 

தங்களுடைய முதல் டெஸ்ட் போட்டியையே வெளிநாட்டில் விளையாடினர் கங்குலியும், டிராவிட்டும்.  மூன்றாவது பேட்ஸ்மேனாக மைதானத்திற்குள் காலடி எடுத்து வைத்த கங்குலி, 301 பந்துகளில் 131 ரன்களை எடுத்து கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையை தன் மீது திருப்பினார்.  அதேபோல், ஏழாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய டிராவிட் 5 ரன்கள் எடுக்க தவறியதன் மூலம் தனது முதல் சதத்தை தவறவிட்டார். 297 பந்துகளை எதிர்கொண்ட டிராவிட் 95 ரன்களை எடுத்தார்.

 
கங்குலி – டிராவிட் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், அந்த டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி  85 ரன்கள் முன்னிலை பெறுவதற்கு வழிவகுத்தது. இருப்பினும் அந்த போட்டியில் இந்திய அணியால் வெல்ல முடியவில்லை. ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆனாலும், இந்திய அணிக்கு இரு ஜாம்பவான்கள் கிடைத்தனர்.

 
அதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான கோலி, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு அழைக்கப்பட்டார். 2011ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்த இந்திய அணியில் வீராட் கோலியும் இடம்பெற்றிருந்தார். அப்போது அவருக்கு வயது 23.

 
அந்த அணியில் வி.வி.எஸ். லக்‌ஷ்மணன், ராகுல் டிராவிட், தோனி ஆகிய மூத்த வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் தனது முதல் டெஸ்ட் போட்டியை தொடங்கிய கோலி, முதல் இன்னிங்ஸில் 4 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் அதற்கு பின்னரான போட்டிகளில் ரன்களை வேகவேகமாக சேர்த்தார். இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் கோலி 8,043 ரன்களை குவித்துள்ளார். 27 சதங்களும் 28 அரை சதங்களும் அடித்துள்ள கோலியின்  பேட்டிங் சராசரி 49.95 ஆகும்.

 
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களான கங்குலி, டிராவிட், கோலி ஆகிய மூவரும் தங்களின் முதல் டெஸ்ட் போட்டியைத் தொடங்கியிருப்பது ஜூன் 20 என்கிற ஒரே தினம் என்பது ஆச்சரியமே!

 

தா.பிரகாஷ்



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...