???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு 0 தமிழகத்தில் பால், தயிர் விலை உயர்வு! 0 காஷ்மீர்: நிதி ஆயோக் உறுப்பினர் சர்ச்சை பேச்சு 0 மன்னிப்பு கேட்காவிட்டால் ரஜினி வீடு முற்றுகை: த.பெ.தி.க. 0 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிப்பு 0 சாய்பாபா பிறந்த இடம் குறித்த சர்ச்சை: ஷீரடியில் கடையடைப்பு 0 பொங்கல் மது விற்பனை: கடந்த ஆண்டைவிட 10% அதிகம்! 0 கார் - லாரி மோதல்: நடிகை ஷாபனா ஆஸ்மி படுகாயம் 0 ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை: நமல் ராஜபக்ச 0 கூட்டணி குறித்து பொது வெளியில் பேச வேண்டாம்: ஸ்டாலின் அறிவுறுத்தல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் ஜுமாஞ்சி -3

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   14 , 2019  06:48:46 IST


Andhimazhai Image
ஜுமாஞ்சி பட ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் வெளியாகி உள்ளது ஜுமாஞ்சி -3.
 
3டி தொழில் நுட்பத்தில் உருவாகி உள்ள  கற்பனை கதைதான் 'ஜுமாஞ்சி தி நெக்ஸ்ட் லெவல்'. ராபின் வில்லியம்ஸ் நடிப்பில் பலரும் பார்த்து வியந்த ஜும்மாஞ்சி படத்தின் 3-ஆம் பாகம்தான் இது.
 
'ஜுமாஞ்சி வெல்கம் டு த ஜங்கிள்' படத்தில் வரும் ஸ்பென்சர், ஃப்ரிட்ஜ், மார்த்தா, பெத்தனி ஆகிய கதாபாத்திரங்கள் சந்திக்க திட்டமிடுகின்றனர். ஆனால்  ஸ்பென்சர்  தாழ்வு மனப்பான்மையாலும் காதல் முறிவாலும் அவதிப்படுகிறான். வாழ்வில் சுவாரஸ்யங்கள் வேண்டும் என்பதற்காக மீண்டும் ஜுமாஞ்சி விளையாட்டுக்குள் போகிறான்.
 
அவரை காப்பாற்ற மற்ற நண்பர்களும் ஸ்பென்சரின் தாத்தா மற்றும் அவரது நண்பர் மைலோவும் விளையாட்டுக்குள் சென்றுவிடுகின்றனர்.  
 
விளையாட்டுக்குள் சென்றதுமே வழக்கம்போல் விளையாட்டில் இருக்கும் கதாபாத்திரங்களாக மாறிவிடுகின்றனர். கேம் என்றாலே டாஸ்க் இல்லாமால் இருக்குமா என்ன….? ஜுமாஞ்சி காட்டின் பொக்கிஷமான சிவப்பு கல்லை பழங்குடியின கிராமம் பாதுகாத்து வருகிறது. அந்த சிவப்பு கல்லை வில்லன் அபகரித்துவிடுகிறான். அந்த சிவப்பு கல்லை வில்லனிடம் இருந்து  மீட்டு  ஜுமாஞ்சியை காப்பாற்ற வேண்டும் இதுதான் இவர்களின் டாஸ்க்.  
 
எதிர்பாராத திருப்பங்கள்,  மனதை மயக்கும் கிராபிக்ஸ் காட்சிகள். கதாபாத்திரங்களை துரத்தும் பிரம்மாண்ட குரங்குகள்,  நீர்யானை,  மலைப்பாம்பு  அடர்ந்த காடு…. இப்படி நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் காட்சிகளாகவே இருக்கிறது.
 
ஸ்பென்சர் தாத்தாவின் நண்பர் மைலோ கேமுக்குள் சென்ற பிறகு ஃபிரான்கிளின் பின்பராக மாறிவிடுகிறார். கறுப்பின கதாபாத்திரங்களை வெறும் நகைச்சுவைக்காக பயன்படுத்தும் மனப்போக்கு ஹாலிவுட்டில் தொடர்ந்து இருக்கிறது. அதுபோலவே கறுப்பின கதாபாத்திரம் என்றாலே சென்னை பாஷையை வைத்து அவர்களுக்கு டப்பிங் செய்யப்படுகிறது. ஏன் படத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் சென்னை பாஷையிலேயே பேசலாமே...


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...