???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு! 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

நீதிபதி கே.எம். நடராஜன் மறைவு - மருத்துவர் ராமதாஸ் இரங்கல்

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   11 , 2020  04:28:11 IST


Andhimazhai Image

ஓய்வு பெற்ற நீதிபதி கே.எம். நடராஜன் அவர்கள் காலமான செய்தியறிந்து வேதனையடைந்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியும், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் ஆலோசகருமான நீதியரசர் கே.எம். நடராஜன் அவர்கள் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

நீதியரசர் கே.எம். நடராஜன் அவர்கள் தான் தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சமுதாயத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட முதல் உயர்நீதிமன்ற நீதிபதி ஆவார்.  சென்னை உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளுக்குப் பிறகு நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தான் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த அவருக்கு அவ்வாய்ப்பை எம்.ஜி.ஆர் அரசு வழங்கியது. நீதிபதியாக பணியாற்றிய காலத்தில்  முக்கியமான வழக்குகளில் குறிப்பிடத்தக்க பல தீர்ப்புகளை வழங்கியவர் நடராஜன் ஆவார்.

சமூகநீதியில் மிகுந்த அக்கறை கொண்ட நீதியரசர் நடராஜன், என் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டவர். சமூகநீதி தொடர்பான விஷயங்களில் என்னுடன் அவர் பல தருணங்களில் நீண்ட விவாதங்களை நடத்தியவர். சமூக நலன் சார்ந்த விஷயங்களில் என்னுடன் இணைந்து பயணித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளில் நீதியரசர் நடராஜன் கலந்து கொண்டுள்ளார்.

நீதியரசர் கே.எம்.நடராஜன் அவர்களின் மறைவு நீதித்துறைக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், சட்டம் மற்றும் நீதித்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...