???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்! 0 விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு 0 தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு 0 சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் 0 தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்! 0 காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு! 0 சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி 0 ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை! 0 அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி! 0 கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: பத்திரிக்கையாளர்கள் சங்கம் கண்டனம்

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   18 , 2018  02:59:27 IST

சபரிமலையில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த பெண் பத்திரிகையாளர்கள் உட்பட பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.
 
இது தொடர்பாக கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் வயது வித்தியாசமின்றி பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் மண்டல கால பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. இதில் பெண்களும் கலந்து கொள்வதற்காக வரலாம் என தகவல் வெளியாகியிருந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களில் ஈடுபடலாம் எனவும் தகவல் வெளியானது.
 
இது தொடர்பாக செய்தி சேகரித்து வெளியிட நாடு முழுவதிலிமிருந்து ஏராளமான பத்திரிகையாளர்கள் நிலக்கல், பம்பை போன்ற இடங்களில் குழுமியிருந்தனர். இந்நிலையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்களை குறிவைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு தரப்பு தாக்குதல் நடத்தியுள்ளது.
 
குறிப்பாக பெண் பத்திரிகையாளர்களை குறிவைத்து இந்த கும்பல் வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்துள்ளது. இந்த சம்பவங்களில் சி.என்.என் நிறுவனத்தின் ராதிகா ராமசாமி, நீத்து ரெகுகுமார், நியூஸ் மினிட் செய்தியாளர் பூஜா பிரசன்னா, என்.டி.டிவி செய்தியாளர் சினேகா மேரி கோஷி, ஆஜ் தக் செய்தியாளர் மவுசமி சிங் உள்ளிட்ட பெண் பத்திரிகையாளர்கள் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு காயம் அடைந்துள்ளனர்.
 
மேலும் ஏராளமான தொலைக்காட்சி நிறுவனங்களின் ஓபி வேன்கள் எனப்படும் நேரலை வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கேமராக்கள் ஆகியவை உடைக்கப்பட்டுள்ளன. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த பொருட்களை வன்முறையை கட்டவிழ்த்து விட்ட கும்பல் திட்டமிட்டே அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பிரச்சனை என்னவாக இருப்பினும் அது குறித்து யதார்த்த கள நிலவரத்தை செய்தியாக சேகரித்து வெளியிடுவது தான் செய்தியாளர்களின் தலையாய பணி. அத்தகைய பொதுப்பணியில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்கள் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்துவதை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
 
செய்தித்துறையினர் மீது தாக்குதல் நடத்துவதாலேயே பிரச்சனையை திசைதிருப்பி மக்களை மடைமாற்றி சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விடலாம் என்ற மோசமான எண்ணத்தோடு தாக்குதல் நடத்திய வன்முறை கும்பல் ஈடுபட்டிருப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் மீண்டும் ஒரு முறை நினைவூட்ட கடமைப்பட்டுள்ளது.
 
பெண்கள் என்றும் பாராமல் செய்தி சேகரித்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நாட்டில் ஊடக சுதந்திரத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக கருத வேண்டியுள்ளது. ஊடகங்களின் குரலாய் களத்தில் இருந்த பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோரை குறிவைத்து தாக்குவதின் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து உண்மையை உலகிற்கு தெரியவிடாமல் தடுத்துவிடலாம் என நினைக்கும் சமூக விரோதிகள் மீது கேரள அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் அழுத்தமாக வலியுறுத்துகிறது.
 
சம்பந்தப்பட்ட நபர்கள் ஊடக ஒளிப்பதிவு கருவிகளின் முன்னிலையிலேயே இத்தகைய தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளதால் அவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் கேரள அரசை கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது.
 
இது போன்ற தாக்குதல்கள் இனிவரும் நாட்களில் நடைபெறாமல் தடுப்பதை உறுதி செய்யவும் கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளது.
 
எத்தனை இடர்கள் வந்தாலும், எத்தகைய வன்முறை சூழல் வந்தாலும் உண்மைகளை மக்கள் அறிந்து கொள்ள களத்தில் நெஞ்சுறுதியோடு முன்நிற்கும் ஊடக தோழமைகளுக்கு என்றும் ஆதரவாக கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் இருக்கும், என இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...