???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் 0 CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் 0 தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி! 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு! 0 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' 0 டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு! 0 முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு 0 டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது! 0 டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத்! 0 சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி 0 கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் 0 கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ 0 பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த் 0 கடன் சுமைக்கு இரு கழகங்களே காரணம்: கமல் 0 நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது வழக்கு தொடருவேன்: விசு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பத்திரிகையாளர் கைது: மு.க.ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் கண்டனம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜனவரி   12 , 2020  06:27:30 IST

 பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘Chennai Book Fair-ல், அதிமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் புத்தகம் இருந்ததால் 'மக்கள் செய்தி மையம்' அரங்கின் அனுமதியை ரத்து செய்து, பத்திரிகையாளர் அன்பழகனையும் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. அன்பழகன் உடனே விடுவிக்கப்பட்டு, உரிம அனுமதியும் திருப்பித் தரப்பட வேண்டும்!’ என்று குறிப்பிட்டுள்ளார். டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘மூத்த பத்திரிக்கையாளர் அன்பழகன் இன்று அதிகாலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. சென்னை புத்தக கண்காட்சியில் அவருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட புத்தகங்களில், ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துடைய புத்தகங்கள் இருந்ததுதான் இந்த கைதுக்கான பின்னணி என சொல்லப்படும் செய்திகள் மிகுந்த கவலையளிக்கிறது. கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற செயல்களை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட அன்பழகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...