அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஜோதி: திரைவிமர்சனம்

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   28 , 2022  14:51:13 IST


Andhimazhai Image

பச்சிளம் குழந்தைகளை பணத்தாசைக்காக விற்கும் கணவனுக்குப் பாடம் புகட்டும் மனைவியின் கதையே ஜோதி திரைப்படம்.

தத்து பெற்றோரால் மிகுந்த பாசத்துடன் வளர்க்கப்படும் அருள் ஜோதி (ஷீலா ராஜ்குமார்), மருத்துவரான அஷ்வினுக்கு (நான் சரவணன்)  திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார். கணவர் பற்றி யார் என்ன சொன்னாலும் நம்பாத அளவுக்கு அளவற்ற அன்பும்‌ காதலும் கொண்டவர். இவரது பிரசவத்திற்கு நான்கு நாட்கள் இருக்க, திடீர் வேலை காரணமாக அஷ்வின் வெளியூர் செல்ல நேர்கிறது. சமயம் பார்த்து காத்திருந்தவர்கள் போல, நள்ளிரவில் ஜோதியின் வயிற்றைக் கிழித்து, குழந்தையைத் திருடிச் செல்கின்றனர். எவ்வித ஈவு இரக்கமும் இல்லாமல் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பதை சொல்வதே படத்தின் மீதிக் கதை.

காணாமல் போன குழந்தையை கண்டுபிடிப்பதற்காக விசாரணையில் இறங்கும் எதிர்வீட்டு போலீஸ்காரர் வெற்றி, அவருடைய மனைவியான கிரிஷா குரூப், மைம் கோபி, ராஜா சேதுபதி என அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். இருப்பினும், கதைக்களம் கடலூரில் நடப்பதால் அவர்களிடம் நேட்டிவிட்டி மிஸ்ஸாகிறது. அது வசன உச்சரிப்பிலும் இல்லை. இயக்குநர் கிருஷ்ண பரமாத்மா இதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மையக் கதாபாத்திரமான ஷீலா ராஜ்குமார் படத்திற்கு பெரும் பலம். கர்ப்பிணிப் பெண்ணாக வரும் காட்சியாகட்டும், மருத்துவமனை காட்சியாகட்டும் ஒவ்வொரு ப்ரேமிலும் கதாபாத்திரமாகவே வாழ்த்திருக்கிறார். அவரின் வாழ்க்கை எங்கு தொடங்கியதோ, அங்கேயே நிறைவடைவது போல் உருவாகியிருக்கியிருப்பது கவித்துவமாக இருக்கிறது.

இயக்கத்தில் கொஞ்சம் முதிர்ச்சி இல்லையென்றாலும், கதை பேசும் உண்மை எல்லாவற்றையும் பின்னுக்குத்தள்ளிவிடுகிறது. செசி ஜெயாவின் ஒளிப்பதிவு கதையின் த்ரில்லர் தன்மைக்கும், கதையின் பரபரப்பிற்கும் வலுசேர்த்திருக்கிறது. ஏனோ, கடலூரின் நிலப்பரப்பைக் குறைவாகவே காட்டியிருக்கிறார்.

ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் பின்னணி இசை கச்சிதமாக இருந்தாலும், சில இடங்களில் காதை மூட வைக்கிறது. ‘ஆரிரரோ’,  ‘யார் செய்த பாவமே’ பாடல் உருக வைக்கிறது.

 உண்மை சம்பவங்களின் தொகுப்பாக எடுக்கப்பட்டிருக்கும் ‘ஜோதி’ வித்தியாசமான கதைக்களத்தால் ரசிகர்களின் மனதை நிச்சயம் அசைத்துப் பார்க்கும்.

 

தா.பிரகாஷ் 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...