???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு 0 தமிழகம் முழுவதும் தளர்வு இல்லா முழு ஊரடங்கு 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 69 பேர் உயிரிழப்பு 0 கல்லூரி செமஸ்டர் தேர்வு பற்றி முடிவு செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 கேரள தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் கைது 0 நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மகளுக்கு இந்தியா என பெயர் சூட்டிய தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   மார்ச்   17 , 2020  08:20:35 IST


Andhimazhai Image
ரிஷிகேஷில் நடைபெற்ற சர்வதேச யோகா திருவிழாவில் முன்னாள் தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஜாண்டி ரோட்ஸ் கலந்துகொண்டார். இதன்பிறகு செய்தித்தாள் ஒன்றிடம் யோகா, இந்திய பயண அனுபவம், கிரிக்கெட் போன்ற பலவற்றையும் அவர் பகிர்ந்துகொண்டார். சிறந்த பீல்டரான ரோட்ஸ் இந்தியாவின் ரசிகராகவும் உள்ளார். தன் மகளுக்கே இந்தியா என பெயர் சூட்டி உள்ளார்.
 
"முதல்முறையாக இந்தியாவில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் நான் பேச்சாளராக பங்கேற்றிருக்கிறேன். எனது உடல்கட்டுக்கோப்பு, வாழ்கைமுறை பற்றி பார்க்கும்போது, யோகா எனக்கொரு ஆசானாக இருக்கிறது. எனது 51 வயதிலும் கட்டுக்கோப்பான உடல்வாகுக்கு யோகா எப்படி எனக்கு உதவியதை என்பதை நிகழ்ச்சியில் அனைவரிடமும் பகிர்ந்துகொண்டேன்.
 
என் மனைவி ஒரு யோகா பயிற்சியாளர்.  நான், கடந்த 6 ஆண்டுகளாக தினமும் யோகா பயிற்சியில் ஈடுபடுகிறேன். நானும் என் மனைவியும் ஒருநாளில் சுமார் ஒன்றரை மணிநேரம் யோகா செய்கிறோம். ஒரு சிறந்த கிரிக்கெட் வீரனாக திகழ உடல் முழுமைக்கும் சீரான தசைகள், உடல் நெகிழ்வுதன்மை இருக்க வேண்டும். இதற்கு எனக்கு பெரிதும் உதவும் பயிற்சியாக யோகா இருக்கிறது.
 
இந்தியாவை பொறுத்தவரை சரியான உடல் கட்டமைப்பு என்றால் அது பாலிவுட் புகழ் சிக்ஸ் பேக்ஸ் தான் என்கிற பார்வை இருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல. உடல் முழுவதும் ஒருங்கிணைந்த திசு வலிமையே உண்மையான ஆரோக்கியம்’. இதற்கு யோகா உதவுகிறது.
 
எனது பயண திட்டத்தில் எப்போதும் இந்தியா முக்கிய அங்கம் வகிக்கிறது. இங்கிருக்கும் பல்வேறு பகுதிகளை நான் ஆராய்ந்திருக்கிறேன். அதன்மூலம் நான் தெரிந்துகொண்டது என்னவெனில், பல்வேறு உலக நாடுகளைவிட இந்தியா தனித்துவமானது. இங்கிருக்கும் ஒவ்வொரு மாநிலமும் தனித்த பண்பாடுகளை கொண்டிருக்கிறது. ஒருவர் சென்னையை மட்டும் பார்த்துவிட்டு இந்தியாவை சுற்றிவந்துவிட்டதாக கூறிவிட முடியாது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது, நான் இருசக்கர வாகனம் எடுத்துக்கொண்டு மும்பையை முழுமையாக சுற்றிபார்த்தேன். 
 
சென்னையில் இருக்கும்போது மகாபலிபுரம் கடற்கரையின் அற்புதமான தருணங்களை அனுபவித்திருக்கிறேன். அதனருகே இருக்கும் கிராமங்களில் தங்கி, அங்குள்ள உணவுகளை ரசித்து உண்டேன். 2019-இல் கோவா சென்றதும் அலாதியான அனுபவம். காஷ்மீரின் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு நான் பெரிய ரசிகன். நான்குமுறை பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்திருக்கிறேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் பனிச்சறுக்கு பயின்றதே அங்குதான். 
 
மோட்டார் பைக்கில் லடாக் செல்ல வேண்டுமென்பது எனது கனவு. நீண்ட நேர பயணம் என்பதால் இதுவரை அந்த கனவு சாத்தியப்படவில்லை. இதற்குமுன் என் மனைவியுடன் உத்தரகாண்ட் சென்றேன். அவர் ஒருமாதத்தை முழுவதுமாக ரிஷிகேஷில் கழித்தார். அதேபோல் குடும்பத்தோடு டெஹ்ராடுன் செல்ல வேண்டுமென்பதும் எனது விருப்பம். நீங்கள் உங்களை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் இந்த உலகை முழுமையாக ஆராய வேண்டுமென்பதே இப்படியான எனது பயணத்துக்கு காரணம்.
 
இந்திய உணவுகள் என்றால் எனக்கு கொள்ளைப்பிரியம். தெருவோரக் கடைகளில் கிடைக்கும் உணவு உட்பட, பல வகையான இந்திய உணவுகளுக்கு நான் ரசிகன். மங்களூர் மீன் கறி, இதர கடல் உணவுகள், தென்னிந்திய சைவ உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அத்துடன் நான் ஆட்டுக் கறிப் ப்ரியன். வட இந்திய அசைவ உணவுகள் என்னை மிகவும் கவர்ந்தவையாக இருக்கின்றன. காஷ்மீர் சென்றிருந்தபோது முதல்வர் உமர் அப்துல்லா பரிமாறிய காஷ்மீரி வாஸ்வான் உண்மையில் வட இந்திய அசைவ உணவில் மிகசிறந்தது என கருதுகிறேன். 
 
ஒரு பயணிக்கு இந்தியா பல்வேறு வாய்ப்புகளை வழங்குகிறது. ஒரு ஆண்டில் ஏறக்குறைய 150 நாட்களை நான் இங்கு கழிக்கிறேன். என் மகளுக்குகூட ’இந்தியா’ என்றுதான் பெயர் சூட்டியிருக்கிறேன். நிறைய பயணிகளிடையே ஐரோப்பிய நாடுகளில் பழமையான வரலாறுகள் இருப்பதாக தவறான செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. என்னளவில் பழமையும், செறிவான வரலாறும் கொண்ட நாடு இந்தியா.
 
இப்போதைய இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை விராத் கோலியை வலிமையான வீரராக பார்க்கிறேன். நிலைத்தன்மை கொண்ட முழுமையான வீரராக அவர் திகழ்கிறார். அவரோடு ஜஸ்ப்ரித் பும்ரா, சுரேஷ் ரெய்னா ஆகியோரின் செயல்பாட்டையும் நான் அங்கீகரிப்பேன். சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ எந்த குறுக்குவழியும் இல்லையென நினைக்கிறேன். கற்றலும் பயிற்சியும் மட்டுமே அதற்கு வழி. 51 வயதிலும் நான் இன்னும் கிரிக்கெட்டை கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். போட்டியில் விளையாடுவதைபோல் எப்போதும் பயிற்சியில் இருக்க வேண்டும். தொடர் பயிற்சி மனிதனை சிறப்பாக்கும் என்பது முதுமொழி. என்னளவில் சிறப்பான பயிற்சி மனிதனை சிறந்தவனாக்கும் என்பேன்." இவ்வாறு கூறி உள்ளார் அவர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...