![]() |
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்கிறார்!Posted : புதன்கிழமை, ஜனவரி 20 , 2021 11:22:10 IST
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசும் இன்று பதவியேற்கின்றனர்.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் களமிறங்கிய ஜோ பைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் இன்று பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
தலைநகர் வாஷிங்டனில் உள்ள Capital கட்டடத்துக்கு முன்பு இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு விழா நடைபெறுகிறது. முதலில் கமலா ஹாரிஸ் உறுதிமொழி ஏற்று, துணை அதிபராக பதவிப்பிரமானம் எடுத்துக் கொள்வார் எனவும், பின்னர் பத்தரை மணிக்கு ஜோ பைடன் பதவியேற்று, நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவத் தளபதி, படைகளை பார்வையிடும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
|
|