???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமருக்கு அரசியல் சாசன பிரதியை அனுப்பியது காங்கிரஸ்! 0 எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது: பிரதமர் மோடி கருத்து 0 சீனாவில் கொரோனா நோய்க்கு 56 பேர் பலி! 0 தமிழகம் பட்டினி பிரதேசமாக மாறும்: வைகோ 0 பெரியார் சிலை உடைப்பு: ஒருவர் கைது 0 ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி 0 திட்டமிட்டு பேசுகிறார் ரஜினிகாந்த்: ராமதாஸ் 0 காஷ்மீரில் 70 லட்சம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டிருக்கிறது: ப.சிதம்பரம் 0 கங்கனா ரனாவத், பி. வி. சிந்துவிற்கு விருதுகள்! 0 நூற்றுக்கு நூறு தேர்ச்சி:5,8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பற்றி அமைச்சர் 0 போலீஸ் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு புகார் 0 சென்னை புத்தகக் காட்சி: கீழடி ஆய்வறிக்கை நூல் 23 ஆயிரம் பிரதிகள் விற்பனை! 0 சிவசேனாவின் நிறமும் காவி தான்: உத்தவ் தாக்கரே 0 குரூப்-4 தேர்வில் முறைகேடு: 99 பேருக்கு வாழ்நாள் தடை 0 CAA-வை எதிர்த்து கையெழுத்து இயக்கம்: திமுக கூட்டணி அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்ட விவகாரம்: வலுக்கும் கண்டனங்கள்

Posted : சனிக்கிழமை,   ஜுன்   15 , 2019  00:41:33 IST


Andhimazhai Image

எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நாகர்கோவிலில் வசித்து வரும் எழுத்தாளர் ஜெயமோகன் மாவு வாங்க கடைக்கு சென்றபோது, கடையின் உரிமையாளரால் பலமாக தாக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் தாக்கியதோடு, ஜெயமோகனின் வீட்டுக்கு சென்று அவரது மனைவியையும் குழந்தையையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றி எழுத்தாளர் ஜெயமோகன் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர்  கடை உரிமையாளர்  செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் எழுத்தாளர் ரவிக்குமார் ஜெயமோகன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் முகநூலில் வெளியிட்ட செய்தி பின்வருமாறு:

 

எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். தோழர் நட.சிவகுமாரிடம் அவரது மொபைல் எண்ணைப் பெற்று பேசினேன். குடிபோதையில் இருந்த கடைக்காரர் எவ்வித முகாந்திரமும் இல்லாமல் தன்னைத் தாக்கியதாகக் கூறினார். கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பேசி அந்த நபர்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்துக் கேட்டேன்.

 

நேற்றிரவே அவர் நேசமணி நகர் காவல்துறையினரால் பிடித்துச்செல்லப்பட்டு எஃப்ஐஆர் போடப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதாக எஸ்.பி கூறினார். எமது கட்சியின் மாவட்டச் செயலாளரை நேரில் போய் ஜெயமோகனை சந்தித்து ஆறுதல் கூறுமாறு கேட்டுக்கொண்டேன்.

 

பொது வெளியில் உடல்ரீதியாகத் தாக்குதலுக்கு உள்ளாகும்போது ஏற்படும் அவமானமும் மன வேதனையும் என்னவென்பதை நான் அனுபவபூர்வமாக அறிவேன். அத்தகைய தருணத்தில் தோழமை தரும் ஆறுதல் முக்கியமானது. ஜெயமோகன் அந்தத் துயரத்திலிருந்து விரைவில் விடுபடுவார், படைப்பூக்கம் அதற்கான மருந்தாக அமையும் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 மேலும் பல எழுத்தாளர்களும் வாசகர்களும் ஜெயமோகனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  

 

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...