???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 யூட்யூப் பிரபலம் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு! 0 தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 135 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி 0 ஊரடங்கு: மட்டன் கிலோ ₹1200க்கு விற்பனை! 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   16 , 2020  10:58:39 IST

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்ததாக கூறி திமுக எம்.பி. தயாநிதிமாறன் மீது அவதூறு வழக்கு தொடர அமைச்சர் ஜெயக்குமாருக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது பொதுமக்கள் மற்றும் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இதுகுறித்து கருத்து தெரிவித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், “இந்தியாவையே உலுக்கிய வியாபம் ஊழலுக்கு அடுத்து டி.என்.பி.எஸ்.சி ஊழல் தமிழகதை உலுக்கியிருப்பதாகவும், இந்த துறையை சார்ந்த அமைச்சர் ஜெயக்குமாருக்கு சம்பந்தப்பட்டிருப்பதற்கான முழு ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவரை முறையாக சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

இதையடுத்து ஜெயக்குமார், அரசியல் ஆதாயம் பெறுவதற்காக பொய்யான குற்றச்சாட்டை தன் மீது சுமத்தி வருவதாகவும், எனவே தயாநிதிமாறன் மீது வழக்குத் தொடரப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதற்கு அனுமதியளிக்கும்படி தமிழக பொதுத்துறையை கோரியிருந்தார்.இந்நிலையில் அதற்கான அனுமதியை தமிழக அரசின் பொதுத்துறை வழங்கியுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...