![]() |
ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வரத்தயாரா? ஜெயக்குமார்Posted : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 19 , 2021 08:42:14 IST
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துண்டு சீட்டு இல்லாமல் விவாதத்துக்கு வந்தால் விவாதிக்கத் தயார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆடிட்டர் குருமூர்த்தியை ஜெயக்குமார் விமர்சித்தது வருத்தம் அளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்த கருத்து குறித்து அவரிடம் கேள்வி எழுப்பபப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அந்த ஜீனியஸூக்கு இந்த ஜீனியஸ் சான்று தருவதாக தான் எடுத்துக்கொள்ள முடியும் என கூறினார். மேலும் 2 ஜீனியஸ்களும் சேர்ந்து நாட்டை கெடுப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
|
|