???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி! 0 அனுமதி இல்லாமல் உள்ளே வரக்கூடாது: சிபிஐக்கு ஆந்திர அரசு தடை 0 கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் பிரதமர் மோடி விசாரிப்பு 0 புயலில் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு 0 கஜா புயலால் 12,000 மின் கம்பங்கள் பாதிப்பு: அமைச்சர் தங்கமணி தகவல் 0 கஜா புயல்: 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை 0 கஜா புயல் பாதிப்புகளை வேதாரண்யம் செல்கிறார் மு.க. ஸ்டாலின் 0 புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: ராமதாஸ் 0 பத்து மாவட்டங்களை சூறையாடிய கஜா புயல்! 0 கஜா புயலுக்கு இதுவரை 20 பேர் பலி 0 கரையைக் கடந்தது கஜா புயல்! 0 கஜா புயல்: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து! 0 அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ‘நியூஸ் ஜெ’ தொடக்கம்! 0 சபரிமலையில் பெண்களுக்கு தனியாக நாட்களை ஒதுக்க கேரள அரசு திட்டம் 0 இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

2021க்கு முன்பு தேர்தல் சட்டமன்ற தேர்தல் வராது: ஜெயக்குமார் பேச்சு

Posted : சனிக்கிழமை,   ஜுன்   23 , 2018  00:25:25 IST

2021-ம் ஆண்டுக்கு முன்பு தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வராது என புதுக்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
 
புதுக்கோட்டையில் அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டம் திருவப்பூர் ரெயில்வே கேட் அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட செயலாளர் வைரமுத்து, முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, தலைமை கழக பேச்சாளர் வேதை சிவசண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
 
கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், அ.தி.மு.க.வில் மட்டும்தான் கட்சி கொடி கட்டும் தொண்டர் தேசிய கொடி கட்டிய காரில் பயணம் செய்ய முடியும்.
 
ஜெயலலிதா இறந்த பிறகு மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டும் என பல்வேறு நாடகங்களை நடத்தியுள்ளார். சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
 
2021-ம் ஆண்டு தான் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும். அதற்கு முன்பு சட்டமன்ற தேர்தல் வராது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும். உள்ளாட்சி தேர்தல் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வந்தவுடன் நடைபெறும். உள்ளாட்சி தேர்தல் நாளைக்கு வந்தாலும் சரி, நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தல் 2021-ம் ஆண்டு வந்தாலும் சரி அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...