அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

உதயநிதி.. உதார்நிதி..! ஜெயக்குமார் விமர்சனம்

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   14 , 2021  11:03:17 IST

பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். கிண்டி ஆளுனர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் எஸ்.பி.வேலுமணி உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் , பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு பன்வாரிலாலுக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார்.
 
மேலும் பேசியவர், “தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி திமுக வாக்குறுதி அளித்ததாகவும் நீட்டுக்கு விலக்கு பெற அதிமுக ஆட்சியில் முறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மாணவர் சமுதாயத்தை திமுக ஏமாற்றியுள்ளதாக குற்றம்சாட்டிய ஜெயக்குமார் திமுக அளித்த வாக்குறுதியை நம்பி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகவில்லை என்றார்.
 
அதிமுக ஆட்சியில் இருந்த சட்டத்துறை, சுகாதாரத்துறை செயலாளர்கள் தான் இப்போதும் இருப்பதாகவும் அவர்கள் தான் அப்போதும் நீட்டுக்கு எதிரான சட்ட முன்வடிவை தயாரித்தார்கள் எனக்கூறிய ஜெயக்குமார் தற்போது நீட்டிலிருந்து விலக்கு பெற்று விட முடியுமா என்றார்.
 
தமிழகத்தின் நிழல் முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார் என்று கூறியவர் உதயநிதி ஸ்டாலினை உதார்நிதி எனவும்  விமர்சித்தார். நீட்டுக்கு எதிராக அன்றைக்கு அவ்வளவு  பேசிய உதயநிதி இன்று எங்கே போனார் என கேள்வி எழுப்பினார். நீட் தேர்வால் நடைபெறும் தற்கொலைகளுக்கு திமுகவே பொறுப்பு எனவும் தயவு செய்து மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...