???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

திமுக பழிச்சொல் வீசுவதை கண்டு கலங்க போவதில்லை: ஜெயக்குமார்

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   09 , 2018  23:59:12 IST

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க மறுத்த விவகாரத்தில், திமுக பழிச்சொல் வீசுவதை கண்டு கலங்கப் போவதில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காழ்ப்புணர்ச்சி மற்றும் ஆட்டுவிப்போரின் சூழ்ச்சியால் மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அதிமுக அரசு மறுத்ததாக முரசொலி நாளிதழில் வெளியான ஸ்டாலினின் அறிக்கையில் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மெரினாவில் உடலை அடக்கம் செய்வதற்கு எதிராக நீதிமன்றங்களில் தொடரப்பட்ட 5 வழக்குகள் நிலுவையில் இருந்ததால், சட்ட சிக்கல்கள் ஏற்பட்டு கடைசி நேரத்தில் குழப்பம் உருவாகும் என்பதால்தான் அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.  இருப்பினும் நல்லடக்கத்திற்கான காரியங்கள் நடைபெறுவதில் இடர்பாடுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அண்ணா பல்கலைகழகம் எதிரே அரசு 2 ஏக்கர் நிலம் ஒதுக்க முன்வந்ததை சுட்டிக்காட்டியுள்ள ஜெயக்குமார், இந்த நடவடிக்கை எப்படி காழ்ப்புணர்ச்சியாகும் என கேள்வியெழுப்பினார்.
 
சட்டப்பேரவைக்குள் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதை எதிர்த்தும் மெரினாவில் இருந்து அவரது நினைவிடத்தை அப்புறப்படுத்துவோம் எனவும் மேடைபோட்டு பேசிய திமுக-வினருக்கு மனசாட்சி இருக்கிறதா என்றும் ஜெயக்குமார் கேட்டுள்ளார். காமராஜர் மற்றும் ஜானகி அம்மையார் மறைந்தபோது, முதலமைச்சராக இருந்து மரணமடைவோருக்குத் தான் மெரினாவில் இடம் என அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி கூறியதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 
அப்பழுக்கில்லாமல் ஆட்சி நடத்திய சித்தர்களை போல உள்ள ஜெயலலிதா மீது எண்ணற்ற வழக்குகளை போட்டு அவமானத்தை பரிசளித்த திமுக-வினருக்கு, அதிமுக அரசின் களங்கமில்லா வெள்ளை உள்ளம் புரியாது என்றும் அவர் கூறியுள்ளார். திமுக பழைய பாதையில் பயணித்து பழிச்சொல் வீசுவதைக் கண்டு அதிமுக கலங்கப் போவதில்லை என்று ஜெயக்குமார் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...