???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   17 , 2020  21:16:11 IST

டி.என்.பி.எஸ்.சி என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப்-4, குரூப்-2 ஏ உள்ளிட்டத் தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த முறைகேடு சம்பவம் தொடர்பாக இடைதரகராக செயல்பட்ட ஜெயக்குமார் உள்ளிட்டவர்களைக் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். இந்தநிலையில், இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக எதிர்கட்சிகள் சார்பில் கேள்வி எழுப்பப்ட்டது.

அதற்கு பதிலளித்த சீருடைப் பணியாளர்துறை அமைச்சர் ஜெயகுமார், ‘டி.என்.பி.எஸ்.சியில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை மேற்கொண்டு முறைகேட்டுக்கு துணையாக இருந்த டி.என்.பி.எஸ்.சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேர்மையாக தேர்வு எழுதியவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதற்காக தேர்வை ரத்து செய்யவில்லை. டி.என்.பி.எஸ்.சியில் முறைகேடு செய்ததற்காக தி.மு.கவினர் சிறை செல்லவேண்டிய நிலை வரும்’என்று காட்டமாக பதிலளித்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...