???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பட்ஜெட் ஏட்டு சுரைக்காய் அல்ல, நாட்டு சுரைக்காய்:அமைச்சர் ஜெயக்குமார்

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   08 , 2019  22:33:23 IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னதுபோல இந்த பட்ஜெட் ஏட்டு சுரைக்காய் அல்ல; எல்லோருக்கும் பயன் தரும் நாட்டு சுரைக்காய் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம் தெரிவித்தார்.
 
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: மாநில வளர்ச்சியில் மக்களை ஏற்றப்பாதைக்கு எடுத்துச் செல்கின்ற சிறந்த பட்ஜெட் இது.
 
தேசிய அளவில் தமிழகத்தின் வளர்ச்சி 8.16 சதவீதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இருக்கின்ற நிதி நிலைமையைக் கொண்டு, மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்ய வேண்டியுள்ளது. வருவாய் பற்றாக்குறை 5 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
 
இது நல்ல கண் உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும், காமாலை கண் உள்ளவர்களுக்கு தெரியாது. சென்னையின் வளர்ச்சிக்கு 2,000 கோடி ரூபாய் நிதி ஒதிக்கியுள்ளது ஸ்டாலின் கண்களுக்கு தெரியவில்லையா? இதற்கு முன்பு இருந்தவர்கள் பண்புள்ளவர்களாக இருந்தார்கள், ஆனால் ஸ்டாலின் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசி வருகிறார்.
 
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீடு என்பது முக்கியம். பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித் தர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சிறு,குறு தொழிலில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்றார் ஜெயக்குமார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...