???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 0 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு! 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   18 , 2018  23:06:59 IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தீபக், தீபா ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரி புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்துக்கு தாங்களே வாரிசு என ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.
 
இதையடுத்து 2016 தேர்தல் பிரமாண பத்திரத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களையும் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பில் உள்ள சொத்து விவரங்களையும் தாக்கல் செய்ய தீபக், தீபா ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
தீபா, தீபக் இருவரும் உரிமை கோரும் சொத்தை குறிப்பிடவும் ஆணையிட்டனர். இல்லையென்றால் வருமானவரித் துறையை பிரதிவாதியாக சேர்க்க நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக் கொண்டுவருவது நீதிமன்றத்தின் கடமை என்று தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 
முன்னதாக, ஜெயலலிதா தனது சொத்து தொடர்பாக உயில் எழுதி வைக்காததால், அவரது சொத்துகளை நிர்வகிக்க அனுமதி கோரி தீபக் சார்பில் வாரிசு உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...