???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்! 0 கர்நாடக தேர்தல்: முதல்வர் சித்தராமையா வேட்புமனுத் தாக்கல் 0 நிர்மலாதேவி விவகாரத்தில் CBI விசாரணை தேவை: வைகோ 0 எஸ்வி.சேகரின் கருத்து, அருவருக்கத்தக்கது: கனிமொழி 0 எச்.ராஜாவும், எஸ்.வி சேகரும் சைபர் சைக்கோக்கள்: அமைச்சர் ஜெயக்குமார் 0 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: மத்திய அரசு பரிசீலனை 0 சிவகார்த்திகேயன் படத்தில் இரண்டாவது காமெடியனாக களமிறங்கும் யோகி பாபு 0 குஜராத் கலவர வழக்கு: முன்னாள் அமைச்சர் மாயாபென் கோட்னானி விடுதலை! 0 அவதூறு கருத்துகள் பரப்பும் எச்.ராஜா மீது வழக்கு தொடரப்படும்: அமைச்சர் ஜெயக்குமார் 0 பேராசிாியை நிா்மலா தேவியை ஐந்து நாள் சி.பி.சி.ஐ.டி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி 0 கியூபாவின் புதிய அதிபராக மிக்வெல் டயாஸ் தேர்வு! 0 ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட விஜயகாந்த், தே.மு.தி.க.வினர் கைது! 0 பெண் பத்திரிகையாளர்கள் பற்றிய சர்ச்சைக் கருத்து: மன்னிப்பு கோரினார் எஸ்.வி.சேகர்! 0 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்யக்கோரி துணை ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு! 0 ஆறாவது ஐ.பி.எல் சதம் : கெத்து காட்டிய கெயில்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மிகக்கடினமான முடிவுகளை எடுக்கத் தயங்காதவர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   06 , 2016  03:23:31 IST


Andhimazhai Image

தமிழக அரசியல் வரலாற்றில் வேறு எந்த முதல்வரும் எடுத்திருக்க முடியாத கடினமுடிவுகளை எடுத்தவர் என்ற பெருமை ஜெயலலிதாவையே சேரும். எம்ஜிஆரால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டவராக இருந்தாலும், அவர் மறைவுக்குப் பின் சொந்த முயற்சியால் அதிமுகவைக் கைப்பற்றியவர். அந்த போராட்டத்துக்குப் பின்னால் இருந்த மனவுறுதி அவரது ஆட்சி நிர்வாகத்திலும் பிரதிபலித்தது. அவர் கடினமான முடிவுகளை எடுத்தது கையைச் சுட்டபோது விரைவாக அந்த முடிவுகளை மாற்றிக்கொள்ளவும் செய்தார்.

 

முதல்முறை முதல்வரான 1991-96 வரையிலான காலகட்டத்தில் அவருக்கு அரசு நிர்வாகத்தில் முன் அனுபவம் ஏதும் இருந்திருக்கவில்லை. ஆனால் நல்ல ஆங்கில அறிவும், ஞாபக சக்தியும் இருந்தன. நாற்பத்து மூன்று வயதில் முதல்வரானவர் அவர். 1989ல் சட்டமன்றத்தில் நிகழ்ந்த தாக்குதல் உள்ளிட்ட விஷயங்களைச் சந்தித்திருந்தார். அவர் நாட்டின் கவனத்தை தன் மீது  முதல்முதலாகத் திருப்பியது என்றால் காவிரி விஷயத்தில் நான்கு நாட்கள் மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தபோதுதான். ஒரு முதல்வராக இருந்துகொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கலாமா என்று அவர் யோசிக்கவில்லை. அதே போல் இடஒதுக்கீட்டுப் பிரச்னையில் 69 சதவீத ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவந்தது அவரது முதல் ஆட்சிக்காலத்தின் முக்கிய சாதனை. காவிரிப் பிரச்னையில் தொடர்ந்து உறுதியாகவே இருந்தார்.

 

அவரது காலகட்டத்தில்தான் காவிரி இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. அது கிட்டத்தட்ட அவரது சொந்த அணுகுமுறைக்குக் கிடைத்த வெற்றி. 2001-2006 வரையிலான இரண்டாவது ஆட்சிக்காலத்தில் அவர் சில முக்கியமான சீர்திருத்த முடிவுகளை எடுத்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து, ஆடு கோழி போன்றவற்றைப் பலியிடத் தடை, ஒரே இரவில் ஒரு லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய முடிவு ஆகியவற்றை சிலவாகக் குறிப்பிடலாம். 20004 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோற்றபிறகு அவர் சில முடிவுகளை மாற்றிக்கொண்டார்.

 

இருந்தபோதும் இந்தியாவே அதிர்ந்துபோகும் அளவுக்கு மிக துணிச்சலான நடவடிக்கையாக காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரை கொலை வழக்கில் கைது செய்யும் அசாத்திய மனவுறுதி அவருக்கு இருந்தது. டாஸ்மாக் மூலம் அரசே மது விற்பனையைச் செய்யும் என்ற முடிவை எடுத்ததும் இந்த காலகட்டத்தில்தான். அதைப் பற்றி செய்யப்பட்ட விமர்சனங்களைப் பொருட்படுத்தவில்லை அவர். அது ஒரு கடினமான முடிவாகவே இருந்தது. ஆனால் அதற்குப் பின் வந்த திமுக அரசும்கூட டாஸ்மாக் கடைகளை மூடிவிடவில்லை என்பது அதன்மூலம் கிடைத்த நிதிவருவாய் பெரும் உதவியாக இருந்தது என்பதற்கு ஆதாரம். 2016 தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று பெருமளவில் குரல்கள் எழுந்தபோது, வாக்குகளுக்காக அனைத்து கட்சிகளும் டாஸ்மாக் கடைகளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூடிவிடுவோம் என்று வாக்குறுதி கொடுத்தன. ஆனால் ஜெயலலிதா கொஞ்சமும் அசைந்துகொடுக்கவே இல்லை. வென்று வந்த பின்னர் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை கொஞ்சமாக குறைக்க மட்டும் செய்தார்.

 

2011-16 வரையிலான ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா முழுக்க முழுக்க நலத்திட்ட அரசாட்சியாளர் என்ற அவதாரத்தை எடுத்தார். அம்மா உணவகம் என்ற திட்டம் அதன் உச்ச கட்டம் ஆகும். இலவச அரிசி, தாலிக்குத் தங்கம் என முழுக்க நலத்திட்ட மழையைப் பொழிந்தார். தேவை என்று பட்டால் எவ்வளவு கடினமான முடிவையும் எடுக்க அவர் தயங்கியதில்லை. விமர்சனம் என்று வந்துவிட்டால் எந்த பெரிய தலைவரையும் இரண்டில் ஒன்று பார்க்க அவர் யோசித்ததில்லை. மாநில அரசுகளை மதிக்காமல் மத்திய அரசு நடந்துகொள்ளும்போது எவ்வளவு பெரிய அவையாக இருந்தாலும் அதிலிருந்து வெளிநடப்பு செய்யும் துணிச்சல் அவருக்கு இருந்தது.   அவர் பேச்சையும் கருத்துகளையும் நாடு முழுக்க அனைத்து தலைவர்களும் காதுகொடுத்துக் கேட்டார்கள். பிரதமர் மோடியுடன் அவருக்கு இருந்த நல்லுறவும் குறிப்பிடத் தக்கது.

 

காவிரி மட்டும் அல்லாமல் முல்லைப்பெரியாறு பிரச்னையிலும் வலுவான அணுகுமுறையைத் தமிழகம் சார்பாகக் கையாண்டவர் அவர். கேரளத்தின் அத்தனை முயற்சிகளையும் முறியடித்து அணையை சட்டரீதியாகக் காத்தார். 

 

தமிழக சட்டமன்றத்தில் தமிழீழப் பிரச்னையில் அவர் கொண்டுவந்த மிக உறுதியான தீர்மானங்கள் அவரால் மட்டுமே கொண்டுவரப் பட்டிருக்ககூடிய தீர்மானங்கள்.

 

உண்மையாகவே தமிழ்நாட்டின் இரும்புப் பெண்மணியாக அவர் இருந்தார் இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.!

 

- நமது சிறப்பு செய்தியாளர்click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...