???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு 0 #Metoo எதிரொலி : பெண் எஸ்.பி பாலியல் புகார் குறித்து விபரம் கேட்கும் பிரதமர் அலுவலகம் 0 கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க சோனியாவிற்கு அழைப்பு 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் 0 பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை 0 என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். 0 லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் 0 என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் 0 தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது 0 #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு 0 மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’!

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   21 , 2018  01:35:33 IST

இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றிய பிரியதர்ஷினி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கி தயாரிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.
 
அந்த அறிக்கையில், ``ஒரு மனிதருக்கு, குறிப்பாக ஒரு பெண்ணுக்கு அதிலும் தனித்து வாழும் பெண்ணுக்கு இந்த வாழ்க்கை எத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தும் என்பதற்கும், அந்த களத்தை மன உறுதியோடு போராடி, தன் ஒப்பற்ற ஆளுமையால் தடைகளை தகர்த்தெறிந்து, நமக்கெல்லாம் இன்றும் வழிகாட்டியாக வாழ்ந்து காட்டிய, தமிழ்நாடு மட்டுமின்றி, இந்திய மக்களாலும் அதிகம் நேசிக்கப்பட்ட இரும்புப் பெண்மணியான ஜெயலலிதாவின்  வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பதற்கான பணிகள் கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
 
ஒரு பெண்ணாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குவதற்கான வாய்ப்பை பெருமையாக நினைப்பதை காட்டிலும், கடமையாக உணர்கிறேன். முன்னணி நடிகர்கள் நடிக்க தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 24 - ம் தேதி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில் படத்தின் தலைப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். `தி அயர்ன் லேடி' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனனும், சசிகலாவின் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...