???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப் 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜெ.உயிருடன் இருக்கும் போது எங்கே இருந்தீர்கள்? தீபாவுக்கு நீதிபதி கேள்வி

Posted : வெள்ளிக்கிழமை,   ஆகஸ்ட்   07 , 2020  23:14:11 IST

போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து, அந்த நிலம், கட்டிடம், மரங்களுக்கு இழப்பீடாக 68 கோடி ரூபாய் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு, தற்போது வேதா நிலையம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இழப்பீடு நிர்ணயித்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், அங்குள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை எடுக்கவும் எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ள தீபா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், நிலம் கையகப்படுத்திய உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரவில்லை. இழப்பீடு வழங்கிய உத்தரவை எதிர்த்து தான் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, ஏற்கனவே இதே போன்று தீபக் தொடர்ந்த வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணையில் உள்ளதால் இந்த வழக்கையும் அதே அமர்வுக்கு மாற்ற நீதிபதி பரிந்துரைத்தார்.

இதைத்தொடர்ந்து, தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதுவரை அசையும் சொத்துக்களை கையகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கு இருந்தீர்கள் என தீபா தரப்புக்கு கேள்வி எழுப்பி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...