???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்! 0 விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு 0 தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு 0 சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் 0 தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்! 0 காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு! 0 சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி 0 ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை! 0 அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி! 0 கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முன்னாள் முதல்வரிடம் கைரேகை பெற்றது ஏன்? மருத்துவர் பாலாஜி தகவல்!

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   14 , 2018  07:39:54 IST

சுகாதாரத்துறை செயலரின் வாய்மொழி உத்தரவின் பேரிலேயே ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றதாக மருத்துவர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.
 
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த விசாரணைக்கமிஷனில் அரசு மருத்துவர் பாலாஜி இன்று ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது திருப்பரங்குன்றம், அறவக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது ஜெயலலிதாவிடம் கைரேகை பெற முதல்வர் மற்றும் தலைமைச் செயலரின் எழுத்து பூர்வ ஆவணம் எதுவும் தனக்கு வரவில்லை எனவும், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனின் வாய்மொழி உத்தரவின் பேரிலேயே விரல்ரேகையை பதிவு செய்ததாக மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த கண்காணிப்புக்காக தமிழக அரசு நியமித்த மருத்துவக்குழுவில் மருத்துவர் பாலாஜி இடம் பெற்றிருந்தார். 
 
இதனிடையே மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ஜெயலலிதாவின் சமையற்காரர் ராஜம்மாள், ஓட்டுநர் ஐயப்பன் மற்றும் முன்னாள் எம்.பி.மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சார்பாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...