???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு 0 மாநில தலைமை தகவல் ஆணையர் தேர்வில் வெளிப்படைத்தன்மை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 'தல' அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா?: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 0 கோவை விபத்தில் காலை இழந்தப் பெண்ணுக்கு வேலை கோரி மனு 0 தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம் 0 சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்பப் பெற வேண்டும்: காஷ்மீர் எம்.பிக்கள் போராட்டம் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 19- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது! 0 முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்! 0 எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினிகாந்த் கேலி பேச்சு 0 பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர்! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி! 0 அயோத்தி வழக்கில் மேல்முறையீடு: இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு 0 கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை

Posted : புதன்கிழமை,   ஜுலை   17 , 2019  22:22:41 IST

இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரியாக பணியாற்றிய குல்புஷன் ஜாதவ், 2016-ம் ஆண்டு மார்ச் 3-ம் தேதி பாகிஸ்தானை உளவு பார்தத்தாக அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டார். 2016-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி குல்புஷன் கைது செய்யப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு தகவல் கொடுத்தது.

2017-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் குல்புஷனுக்கு தூக்குத் தண்டனை விதித்தது. ஜாதவ்வுக்கு, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக இந்திய அரசு ஐ.நாவில் முறையிட்டது. மேலும், பாகிஸ்தான் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்குத் தொடர்ந்தது.

அந்த வழக்கில், 2017-ம் ஆண்டு மே 9-ம் தேதி ஜாதவ்வுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில், நெதர்லாந்திலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை15 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ’குல்புஷன் ஜாதவ்வுக்கு வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்யவேண்டும். இந்த வழக்கை மறுவிசாரணை செய்யவேண்டும். பாகிஸ்தான் அரசு, ஜாதவ்வை தொடர்பு கொள்வதற்கான இந்திய அரசின் உரிமையை மறுத்துள்ளது. ஜாதவ்வுக்கு உரிய சட்ட உதவிகளை வழங்கவில்லை. வியன்னா மாநாட்டு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியுள்ளது’ என்று தீர்ப்பளித்தனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...