???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜே.அன்பழகன் உடல்நிலையில் மாற்றம் இல்லை!- மருத்துவமனை 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்! 0 அமெரிக்காவில் இந்திய தூதரகம் அருகே காந்தி சிலை அவமதிப்பு 0 கர்ப்பிணி யானை கொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை: பினராயி விஜயன் 0 இந்தியாவில் 2,16,735 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு 0 தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம் 0 தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று 0 வெங்காயம், பருப்பு, பயறு வகைகளை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்க மத்திய அரசு முடிவு 0 ஆன்லைன் வகுப்பு கல்வியில் சமத்துவமின்மையை அதிகப்படுத்தும்: ராகுல் காந்தி 0 கொரோனா இன்று- தமிழகம் 1286, சென்னை 1012! 0 அன்னாசிப்பழத்தில் நாட்டுவெடி! கருவுற்ற யானையின் கண்ணீர் மரணம்! 0 கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு: கல்வித்துறை தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜப்பான் பெண்ணின் போலி அம்மா தந்திரம்!

Posted : சனிக்கிழமை,   டிசம்பர்   14 , 2019  06:52:18 IST


Andhimazhai Image
ஒருவரை போல் மற்றொரு போலி உருவத்தை வைத்து ஏமாற்றும் தந்திரம் சினிமாவில்தான் நடக்கும். ஆனால் நிஜத்தில், ஜப்பானில் உள்ள குழந்தையின் தாய் ஒருவர் தன்னைப்போலவே போலி உருவத்தை வைத்து தனது குழந்தையையே ஏமாற்றி வருகிறார்.
 
கேட்க புத்திசாலிதனமாக இருக்கும் இந்த யோசனை நெட்டீஸன்கள் மத்தியில் விமர்சனத்தை பெற்றிருக்கிறது.
 
ஜப்பானில் ஒருவயது குழந்தையின் தாய் ஒருவர், தான் இல்லாத நேரத்தில் குழந்தை தன்னை தேடி அழக்கூடாது என்பதற்கு ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டிருக்கிறார்.
 
தனது உருவம் பொறித்த கட் - அவுட்களை உருவாக்கி குழந்தையின் பார்வை படும் இடத்தில் வைத்துவிட்டார். அம்மா இல்லாத நேரத்தில் அழுத அந்த குழந்தை, இப்போது அந்த கட்-அவுட்களை நிஜமான அம்மா என நம்பி சமத்தாக விளையாடிக்கொண்டிருக்கிறது.
 
குழந்தை நம்பும்படி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, முட்டிபோட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கும்படி ஒரு கட்-அவுட், சிரித்துக்கொண்டு நிற்கும்படி ஒரு கட்-அவுட்டை உருவாக்கி வைத்திருக்கிறார் அந்த அம்மா.
 
இந்த புகைப்படங்கள், காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. முதலில் இதனை பலரும் வேடிக்கையாக பார்த்து கருத்து கூறினர். இப்போது பலரும் குழந்தையின் உளவியல், தனிமை உணர்வு பற்றி வருத்தம் கூறி விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
 
 
“பெற்றோர் அருகில் இல்லாமல் குழந்தைகள் இயல்பாக இருக்கும் பக்குவத்தை பெற வேண்டும். ஆனால் அப்படி இருக்க முடியாத குழந்தகளிடம் உளவியல் ரீதியாக சிக்கல் இருக்கிறது என் அர்த்தம். அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும், இம்மாதிரியான குழந்தைகள் பிரிவை தாங்கிகொள்ள முடியாமல் ஏங்குவார்கள். இப்படி செய்வது சரியல்ல” என்று இந்த தாயின் புத்திசாலித்தனத்தை இணையத்தில் பார்த்த ஒருவர் கூறியிருக்கிறார்.
 
“நல்ல யோசனைதான், ஆனால் இப்படி நடப்பது வருத்தமளிக்கிறது. இரு கோணங்களில் இருக்கும் கட்-அவுட்கள் அம்மாவுக்கு மாற்றாக இருந்தும் குழந்தை அதனை கண்டுகொள்ளவில்லை. அதுபற்றி சிந்தியுங்கள்” என இதுகுறித்து மற்றொரு நெட்டீஸன் கோபமாக கூறியிருக்கிறார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...