???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை

Posted : திங்கட்கிழமை,   மே   25 , 2020  22:15:33 IST

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியா உள்பட கூடுதலாக 11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஊரடங்கு உத்தரவை தளர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.  கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.  அதனால் இந்த தளர்வு அறிவிக்கப்படுகிறது என அவர் கூறினார்.

எனினும், ஊரடங்கு தளர்விற்கு பின்பும், மக்கள் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

இது ஒருபுறம் இருக்க கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் மற்றொரு நடவடிக்கையாக இந்தியா உள்பட கூடுதலாக 11 நாடுகளின் மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை விதித்து உள்ளார்.

ஜப்பானில் 188 நாடுகளை சேர்ந்த மக்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.  இந்த பட்டியலில், ஆப்கானிஸ்தான், அர்ஜெண்டினா, வங்காளதேசம், எல் சால்வடார், கானா, கினியா, இந்தியா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய 11 நாடுகளும் சேர்க்கப்பட்டு உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன், தனது நாட்டு குடிமக்கள் இந்த 11 நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று ஜப்பான் அரசு அறிவுறுத்தி இருந்தது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...