???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படும்: பிரதமர் 0 கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி! 0 ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு 0 எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து செயல்பாட்டுக்கு அரசு உதவும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் 0 "ஆளுநர் மௌனம் காப்பது ஏன்?": அற்புதம் அம்மாள் கண்ணீர் 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   நவம்பர்   11 , 2018  21:28:22 IST

ஜனார்த்தன ரெட்டியை வரும் 24-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
நிதி நிறுவன அதிபரின் வழக்கை முடித்துத் தர 57 கிலோ தங்கத்தை பெற்றதாக எழுந்த புகாரின்பேரில், பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி இன்று கைது செய்யப்பட்டார்.
 
கர்நாடகாவில் ஆம்பிடென்ட் குழுமம் என்ற நிதி நிறுவனம் முதலீட்டாளர்களை ஏமாற்றி 600 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கிலிருந்து அதன் உரிமையாளர் அகமத் ஃபரீத் என்பவரை காப்பாற்ற ஜனார்த்தன ரெட்டிக்கு 57 கிலோ தங்கம் கைமாறியதாக புகார் எழுந்தது.
 
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் தனிப்படைகளை அமைத்து ஜனார்தன ரெட்டியை தேடி வந்தனர். இந்நிலையில் ஜனார்தன ரெட்டி, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேற்று சரணடைந்தார்.
 
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஜனார்த்தன ரெட்டியையும், அவரது கூட்டாளி அலிகானையும் குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். தொடர்ந்து, ஜனார்த்தன ரெட்டியை வரும் 24-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...