???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜம்மு காஷ்மீரில் அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்வு: மத்திய அரசு

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   13 , 2019  00:16:13 IST

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை அளித்து வந்த அரசியல் சாசனத்தின் 370 -ஆவது சட்டப்பிரிவை, கடந்த மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் இம்மாநிலம், ஜம்மு மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மொபைல்போன் மற்றும் இணையதள சேவை தற்காலிகமாக தூண்டிக்கப்பட்டிருந்தன. ஜம்மு , ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தின் முன்னாள் முதல்வர்களான மெஹபூபா முஃபதி, உமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பதற்றம் இல்லாத பகுதிகளை தவிர்த்து பிற இடங்களில் படிப்படியாக கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் நீடித்தன. இந்த நிலையில்,  ஜம்மு காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

வாகன போக்குவரத்தும் இயல்பு நிலையை எட்டியுள்ளது. தரைவழி தொலைபேசி இணைப்புகள் முழுவதும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மொபைல் போன்களும் குப்வாரா மற்றும் ஹந்த்வாரா ஆகிய இடங்களில்  கணிசமாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...