அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஜம்மு காஷ்மீர் விவகாரம்: மாநில அந்தஸ்து தரப்படுமா?

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   25 , 2021  14:33:03 IST


Andhimazhai Image

காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைத்து பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தி இருப்பது பல்வேறு தரப்பிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. காஷ்மீரை லடாக், ஜம்முகாஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, எதிர்க்கட்சிகளால் விமர்சனத்துக்கு உள்ளான அரசு, இப்போது பேச்சு வார்த்தை நடத்தி இருப்பது ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.


இந்திய அரசமைப்பு சட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 , 1957ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. கடந்த அரைநூற்றாண்டு காலமாக இந்த சிறப்பு அந்தஸ்து தொடர்பான விவாதம் பல்வேறு தரப்பினரால் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், இது தொடர்பான வழக்கொன்றை, கடந்த 2015ஆம் ஆண்டு விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு அந்தஸ்தை நீக்குவது தொடர்பான அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே இருக்கிறது என சுட்டிக்காட்டியது.


சட்டப்பிரிவு 370 ஐ நீக்க வேண்டும் என பாஜகவினர் கூறிவந்த நிலையில், 2014 மக்களவை தேர்தலின்போது, இந்த கோரிக்கையை பாஜக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதன்படி, இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பாஜக கடந்த 2019ஆம் ஆண்டு  சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டன.

 


இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் முற்றிலுமாக முடக்கப்பட்டது. இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. மெஹபூபா முஃப்தி, உமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் பலர் 22 மாதங்களுக்கு மேலாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகளும் கண்டனங்களும் எழுந்தது.இந்நிலையில் தான், ஜம்மு-காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று மூன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட ஜம்மு-காஷ்மீரின் 14 முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். மீண்டும் மாநில அந்தஸ்து, தேர்தல் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகிய நிலையில்,  கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒமர் அப்துல்லா, "ஜம்மு-காஷ்மீரின் மறுவரையறை நடைமுறைகளில் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும், ஜம்மு காஷ்மீரில் கூடிய விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஆனால் முதலில் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுத்துவிட்டுத் தேர்தலை நடத்தலாம் என குலாம் நபி ஆசாத் கூறினார்” என்றார்.


இந்தக் கூட்டத்தில் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது குறித்து விவாதிக்கப்படவில்லை என முன்னாள் துணை முதல்வர் முஸாபர் பெய்க் கூறினார்.


காங்கிரஸ் சார்பில் 5 கோரிக்கைகள் வைக்கப்பட்டதாகத் தெரிவித்த குலாம் நபி ஆசாத், "மாநில அந்தஸ்து வழங்குவது, தேர்தல் நடத்துவது, அரசியல் கைதிகளை விடுவிப்பது, பண்டிகளைத் திரும்ப அழைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தோம்" என்று கூறினார்.

-தா.பிரகாஷ்click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...