???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியது! 0 மோடியின் வேண்டுகோளால் மின்சார கட்டமைப்பில் இன்று பாதிப்பு உண்டாகும்: ஜெய்ராம் ரமேஷ் 0 இந்தியாவில் 21 - 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே 42% கொரோனாவால் பாதிப்பு 0 இன்று முதல் மதியம் 1 வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க அனுமதி 0 துபாயில் இருந்து வந்த நபரால் 11 பேருக்கு கொரோனா 0 கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது! 0 தமிழகத்தில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழப்பு 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-5 0 விலங்கோடு மக்கள்… கால்நடை மருத்துவர் வே.ஞானப்பிரகாசம் எழுதும் பணி அனுபவத் தொடர்-4 0 பாசக்கார மனிதர்கள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2500-ஐ கடந்தது! 0 இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா- கோவிட் என பெயர் சூட்டிய பெற்றோர்! 0 ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரிப்பு 0 டார்ச்லைட்டுக்கே பிரதமர் இப்போதுதான் வருகிறார்: கமல் 0 மூடநம்பிக்கையை வளர்க்கும் விதமாக பிரதமர் பேசுகிறார்: கார்த்தி சிதம்பரம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   பிப்ரவரி   16 , 2020  11:14:46 IST

டெல்லியில் மதுரா சாலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த டிசம்பர் 15ந்தேதி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது, நடந்த கலவரத்தில் போலீசார் மாணவர்களை கடுமையாக தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  எனினும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என அரசு சார்பில் கூறப்பட்டு வந்தது.  இந்நிலையில், டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக நூலகத்தில் மாணவர்களை போலீசார் தாக்கும் 49 வினாடிகள் ஓடும் வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தில், எம்.பில். பட்டமேற்படிப்பு பிரிவு உள்ளது.  இது படிக்கும் அறையாக செயல்பட்டு வந்துள்ளது.  இதனிடையே, காவலர்கள் உடையணிந்த சிலர் அதிரடியாக இந்த அறைக்குள் நுழைகின்றனர். அவர்கள் அங்கிருந்தவர்களை கடுமையாக தாக்குகின்றனர்.  இதனால் அச்சத்தில் மாணவர்கள் சிலர் தப்பியோடுகின்றனர்.  தொடர்ந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

இதுபற்றி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் போலீசார் நடத்திய தாக்குதல் தொடர்புடைய வீடியோ பரவி வருகிறது என எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.
 மூக ஊடகங்களில் பரவி வரும் புதிய வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை என தெளிவுப்படுத்தி கொள்கிறோம்.  ஜாமியா ஒருங்கிணைப்பு குழுவுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அந்த அமைப்பு எங்களுடைய அதிகாரப்பூர்வ அங்கமும் இல்லை.

ட்விட்டர் கணக்குகள், முகநூல் பக்கங்கள் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பிற பயனாளர்கள், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பெயரை பயன்படுத்துகின்றனர். மக்களிடையே குழப்பம் விளைவிக்கின்றனர் என தெரிவித்து உள்ளது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...