???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு 0 ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் 0 மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா! 0 நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு 0 சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை! 0 சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு 0 அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு 0 தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை 0 கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜல்லிக்கட்டு: அசலான வாழ்வின் சுவடுகள்

Posted : திங்கட்கிழமை,   அக்டோபர்   21 , 2019  05:25:05 IST


Andhimazhai Image

பன்றிக்கறி பிரதானமாக இடம்பெறும் அங்கமாலி டைரிஸ் மலையாளத் திரைப்படத்தின் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெலிசேரியின் புதிய படம் ஜல்லிக்கட்டு. இது வெளியாவதற்கு முன்பே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படம். அதில் பன்றி என்றால் இதில் எருமை மாடு. இந்த படம் வெளியாவதற்கு முன்பு இந்த படத்திற்கான போஸ்டர்கள் அதிக கவனம் பெற்றதையும் குறிப்பிடவேண்டும்.

 

கசாப்புக் கடைக்காரர்களால் கொல்லப்பட வேண்டிய ஒரு எருமை தப்பித்துவிடுகிறது... அதை பிடிக்க ஊர் மக்கள் படும்பாடுதான் படத்தின் கதை.. எழுத்தாளர் ஹரீஷ் எழுதிய ‘ ’மாவோயிஸ்டு’ சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். எழுத்தாளர் ஹரீஷுடன் இணைந்து ஜெயகுமார் என்பவர் இத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார்.

 

ஒரு ஆழமான எழுத்தின் மூலமே தெளிவான திரை மொழியை வெளிக்கொண்டு வர முடியும் என்பதற்கு இத்திரைப்படம் சிறந்த உதாரணம்.

 

படம் தொடங்கும்போது மனிதர்கள் மாறி மாறி மூச்சுவிடும் சத்தம் பயன்படுத்தப்பட்டிருக்கும். அந்த மூச்சுவிடும் சத்தம் நம்மை ஏதோ செய்துவிடும். படம் முழுக்க சத்தங்கள் பயன்பட்டிருக்கிறது. குறிப்பாக அடர் வனங்களில் காணப்படும் பூச்சிகளின் சத்தம், மாடு மூச்சுவிடும் சத்தம்… நீரோடையின் ஒலி என்று எல்லாவற்றை பார்வையாளர்களை உணரவைத்திருக்கிறார்கள். இதற்காகவே சவுண்டு மிக்சிங் செய்தவர்களை பாராட்ட வேண்டும்.

 

கறிக்கடையில் வேலை செய்பவராக ஆண்டனி ,மாட்டை சுட்டு பிடிக்க வரும் குட்டச்சன், கறிக்கடை உரிமையாளர் வினோத் ஜோஸ் போன்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அசத்தியிருக்கிறார்கள். கடவுளின் தேசமான கேரளாவை எப்படி காட்சிப்படுத்தினாலும் அழகுதான் என்பார்கள். ஆனால் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு இயற்கையை வேறு கோணத்தில் ரசிக்க வைத்திருக்கிறது.

 

அட்டை பூச்சி, புழு, தண்ணீரில் உலவும் தவளை குஞ்சுகளை காட்சிப்படுத்தி புல்லரிக்க வைக்கிறார். மக்கள் கூட்டம் சேர்ந்து ஒரு எருமையை தேடும் காட்சிகளை அவர் எப்படிய்யா இப்படி காட்டியிருக்கிறார் என்று அசத்துகிறார். பெண் கதாபாத்திரங்கள்  அவ்வப்போதுதான் வருகிறது. அவர்களும் ஆண்களின் கட்டுப்பாட்டில் சிக்கியவர்களாகவே இருக்கிறார்கள்.

 

ஒரு எருமை தனது கட்டுபாட்டைவிட்டு தப்பி சென்றது என்ற எண்ணம் மனிதர்களை எப்படியெல்லாம்  மூர்க்கமாக மாற்றுகிறது. மனிதர்கள் உண்மையாகவே நாகரீகமானவர்களா? என்ற முக்கிய கேள்வியை திரைப்படம் எழுப்பி உள்ளது. இயக்குநர் லிஜோ ஏமாற்றவில்லை!

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...