???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜனவரி   20 , 2019  21:51:13 IST

விராலிமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1353 காளைகள், 424 காளையர் என பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி காலை 7 மணியளவில் தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியை தொடங்கி வைத்தார். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்த இந்தப் போட்டியில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கும் கூட இன்சூரன்ஸ் செய்யப்பட்டிருந்தது. இதேபோல், வீரர்கள் காயம் அடைந்தால் அவர்களுக்கு சிகிச்சைக்காக அறுவை சிகிச்சை மற்றும் ஸ்கேன் மையங்களும் அருகில் அமைக்கப்பட்டிருந்தது.
 
ஜல்லிக்கட்டு வரலாற்றிலேயே இங்கு அதிகமான காளைகள் கலந்துகொள்ள உள்ளதால் இந்த ஜல்லிக்கட்டை உலக சாதனையில் இடம்பெறச் செய்வதற்காக கின்னஸ் உலக சாதனை மதிப்பீட்டுக் குழு வருகை தந்திருந்தது. காலை 8 மணிக்கு துவங்கிய இந்த போட்டி மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து நாள் முழுவதும் காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் களத்தில் விடாமல் மல்லுக்கட்டினர். இந்த போட்டியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
 
இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்று கொண்டிருந்தபோது, காளை பாய்ந்து மணப்பாறை சொரியம்பட்டியை சேர்ந்த ராமு (35) என்பவர் உயிரிழந்தார். இதேபோல், மாடு முட்டியதால், பலத்த காயமடைந்த திருச்சி மாவட்டம் ஜீயபுரம் எனும் ஊரைச் சேர்ந்த சதீஷ்குமார் (43) என்பவரும் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மேலும், காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் உட்பட 41பேர் காயம் அடைந்தனர்.
 
தொடர்ந்து நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியின் இறுதியில் 21 காளைகளை பிடித்த திருச்சி கொட்டப்பட்டு முருகானந்தம் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். 16 காளைகளை அடக்கிய காட்டூர் கார்த்தி 2ஆம் இடமும், 14 காளைகளை அடக்கிய செங்குறிச்சி ஆனந்த் 3ஆம் இடமும் பிடித்தனர்.
 
சிறந்த காளையாக ராப்பூசல் முருகானந்தம் என்பவரது காளை முதலிடம் பிடித்தது. அந்த காளையின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தங்கபுரம்பட்டி விக்னேஷ் என்பவரின் காளைக்கு பைக்கும் பரிசாக வழங்கப்பட்டது.
 
ஒரே நாளில் ஆயிரத்து 353 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டியை உலக சாதனையாக கின்னஸ் புத்தகம் அங்கீகரித்துள்ளது. கின்னல் சாதனை ஆங்கீகாரக்குழு நிர்வாகிகள் மெலடியோ, மார்க் ஆகியோர் விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டி உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழை போட்டியின் இறுதியில் வழங்கினர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...