???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   21 , 2018  01:55:10 IST

சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு கடந்த 2012-ம் ஆண்டில் அமைத்தது.
 
இந்த ஆணையத்தை எதிர்த்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுபோன்ற ஆணையங்களுக்கு அவசியம் இல்லாமல் அதிக நிதி ஒதுக்கக் கூடாது என உத்தரவிட்டது.
 
இதனிடையே, அந்த ஆணையத்தின் தலைவர் பதவியை ரகுபதி ராஜினாமா செய்தார். மேலும், கருணாநிதியும் காலமானார். இந்த சூழலில் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ரகுபதி ராஜினாமாவை அடுத்து புதிய நீதிபதி தலைமையிலான ஆணையம் அமைக்கப்படுமா? என கேள்வியெழுப்பினார். மேலும், இதுகுறித்து வரும் 27-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு அவர் உத்தரவிட்டார்.
 
இதையடுத்து, பிற ஆணையங்களின் நிலை குறித்து நீதிபதி சுப்பிரமணியம் கேட்டார். அப்போது தமிழக அரசு தரப்பில், ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து, மேற்கொண்டு கால அவகாசத்தை நீட்டிக்காமல் ஜல்லிக்கட்டு கலவரம் குறித்த விசாரணையை முடிக்க வேண்டுமென நீதிபதி அறிவுறுத்தினார். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனுக்கு நியாயமான கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி சுப்பிரமணியம் அறிவுறுத்தினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...