???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இடியால் சேதமான தாஜ்மஹாலின் பிரதான கல்லறை 0 தியேட்டர்கள் திறக்க அனுமதி வேண்டும்: அரசுக்கு பாரதிராஜா கடிதம் 0 இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்வு! 0 'மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கொரோனாவா கோவில் காளையா? மதுரைக்காரர்களின் மாறுபட்ட முடிவு!

Posted : வியாழக்கிழமை,   ஏப்ரல்   16 , 2020  04:15:01 IST


Andhimazhai Image
 
மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள மதுவாரப்பட்டியில் செல்லாயி அம்மன் கோவில் காளை மூலி இரு நாட்கள் முன்பு இறந்தது. பல ஜல்லிக்கட்டுக்களில் தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றுவந்த காளை அது. கடந்த பத்து ஆண்டுகளில் அலங்காநல்லூரிலும் சுற்றிலும் இருக்கும் கிராமங்களிலும் பல கோப்பைகளை அது வென்றது. ஒவ்வொரு முறை வெல்லும்போது அதன் கோப்பையுடன் ஊரில் வலம் வருவார்கள். மூலி ஜல்லிக்கட்டில் ஆக்ரோஷமாக இருந்தாலும் ஊரில் செல்லப்பிள்ளையாக வலம் வந்துகொண்டிருந்தது.
 
கடந்த பத்து நாட்களாக சாப்பிடாமல் இருந்த மூலி இறந்துவிட்டது. இதை அடுத்து ஊர்மக்கள் அந்த காளைக்கு சிறப்பாக இறுதி ஊர்வலம் நடத்தினர். நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
ஆனால் கொரோனாவை முன்னிட்டு சமூக இடைவெளி கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மனித இறுதிச் சடங்குக்கே அதிக பட்சம் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ள தடை விதித்துள்ளது. ஆனால் கிராம மக்கள் காளை மீது கொண்ட பற்றால் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்டனர். இ ந்த காணொளிக் காட்சிகள் வெளியானதும் பார்த்தவர்கள்  பதறிவிட்டனர்.
 
 
இதை அடுத்து காவல்துறையினர் ஊர்வலத்தில் கலந்துகொண்ட, ஏற்பாடு செய்தவர்கள் மீது 144 தடை உத்தரவை மீறியதாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
 
காளையா கொரோனாவா என்றபோது காளைதான் பெரிது என்று இக்கிராம மக்கள் கூடி இருப்பது நகரவாசிகளுக்கு வியப்பை அளிக்கிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...