அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஜகமே தந்திரம்!- திரை விமர்சனம்

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுன்   18 , 2021  19:47:11 IST


Andhimazhai Image

மதுரையைச் சேர்ந்த சுருளி என்ற ரவுடி லண்டன்போய் அங்கே சில அனுபவங்களுக்குப் பின் தமிழ் அகதிகளின் ரட்சகன் ஆகும் கதையே ஜகமே தந்திரம். நெட்ப்ளிக்ஸில் வெளியாகி இருக்கிறது.

சுருளி பாத்திரத்தில் பின்னி பெடல் எடுக்கிறார் தனுஷ். ரயில் பாதையில் காரை நிறுத்தி ரயிலை மறித்து சம்பந்தமில்லாமல் ஏதோ பேசிக்கொண்டு கொலை செய்யும் கேங்க்ஸ்டர். பணம் மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு எந்த பிடிப்பும் இல்லாத கூலிப்படை ஆளாக வரும் சுருளி.

இதற்கிடையில் லண்டனுக்கு படாதபாடு பட்டு வரும் ஈழத்தமிழ் அகதிகளின் கதையை சுருக்கமாகவும் அதே சமயம் மனதில் தைக்கும்படியாகவும் சொல்ல முயற்சி செய்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.

அட்டில்லாவாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி கனமான பாத்திரத்தில் கச்சிதமாக இருக்கிறார்.

ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்யும் லண்டன் கேங்ஸ்டராக வரும் சிவதாஸ் பாத்திரத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஓர் ஆச்சர்யமான அறிமுகம்! அசத்தி இருக்கிறார்.

பாடல்கள், பின்னணி இசை என்று வழக்கம்போல் சந்தோஷ் நாராயணன் பின்னிவிட்டார்.

எப்போதும்போல படத்தைத் தூக்கிப் பிடிக்கிறார் தனுஷ். இனி இவரை வைத்து உள்ளூர் படமே எடுக்க முடியாது போலிருக்கிறது. வெளிநாட்டு வில்லன்கள், சர்வதேச கதைதான் ஒத்துவரும் போலிருக்கிறது!

சுருட்டுப் பிடித்துக்கொண்டு வரும் வில்லன் பீட்டர் ( படம் முழுக்க வந்துட்டே இருக்காரே…) மூலமாக வெள்ளை இனத்தவரின் இனவெறியைச் சொல்லும் இயக்குநர், லண்டனில் ஈழத்தமிழர்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கேங்க்ஸ்டர் கும்பலாக டீல் பண்ணி இருப்பது சற்று சிரமமாக இருக்கிறது.

கேங்க்ஸ்டர்கள், துரோகம், காதல், அகதிகள் பிரச்னை என்று எல்லாவற்றையும் சேர்த்து ஒரு துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்கும் மசாலாவாக இயக்குநர் பிசைந்திருந்தாலும், என்னவோ குறைகிறது. நிறைய சர்வதேச அரசியலை போகிறபோக்கில் பேசும் கேங்க்ஸ்டர் படம் என்பதால்தான்  இந்த  உணர்வோ என்று புரியவில்லை!

நம் இனத்துக்கு வீழ்ச்சியே துரோகத்தால்தான் என்பவை போன்ற சில இடங்களில் கூர்மையான வசனங்கள் கவனிக்க வைத்தாலும் ஆளாளுக்கு துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு திரிவதால் அழுத்தமாக சொல்லப்படவேண்டிய அகதிகளின் கதையில் தடுமாற்றம்!

தனுஷ் ரசிகர்களுக்குப் பிடிக்கும்!

 

-எம்மெம்



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...