???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டாடாவின் காதல் தோல்வி! 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் 0 CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் 0 தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி! 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு! 0 'CAA-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' 0 டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு! 0 முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் விஸ்வநாதன் சந்திப்பு 0 டெல்லி தமிழ்நாடு இல்லம் முற்றுகை: மாணவர்கள் கைது! 0 டிரம்ப் வருகைக்காக விழாக்கோலத்தில் குஜராத்! 0 சென்னை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது தடியடி 0 கடனைக் குறைப்பதற்கான எந்த ஒரு செயல்திட்டமும் இல்லை: தினகரன் 0 கடன் சுமை அதிகரித்திருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை: வைகோ 0 பட்ஜெட்டில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம்: விஜயகாந்த்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஒவ்வொரு நாளும் முப்பது ரூபாய்! - இயக்குநர் ஜெகதீசன் சுபுவின் நேர்காணல்

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   20 , 2019  03:43:17 IST


Andhimazhai Image
ஓர் ஒட்டகத்தை வைத்து பக்ரீத் படம் எடுத்து கவனத்தை ஈர்த்திருக்கிறார் ஜெகதீசன் சுபு. மனிதனுக்கும் விலங்குக்குமான அற்புதமான உறவைச்  சொல்கிறது இப்படம். இயக்குநரிடம் பேசினோம்.
 
 
 ”என் சொந்த ஊர் வேலூர் பக்கம் ஆற்காடு. சிறு வயதில் அப்பாவை இழந்த எனக்கு எல்லாம் அம்மாதான். எனக்கு இரண்டு அண்ணன்கள் இருக்கிறார்கள். சின்ன வயது முதலே சினிமா என்றால் அப்படி ஒரு பைத்தியம். நான் பார்க்காத படமே கிடையாது. சினிமாதான் வேண்டும் என்று உறுதியாக இருந்ததால் அம்மாவும் என் ஆசைக்கு குறுக்கே நிற்கவில்லை.  பன்னிரெண்டாம் வகுப்போடு படிப்பை முடித்துவிட்டு சினிமா ஆசையுடன் இரண்டாயிரமாவது ஆண்டே சென்னைக்கு வந்துவிட்டேன்.
 
 
சென்னைக்கு வரும்போது எனக்கு ஒன்றுமே தெரியாது. நண்பர்களுடன் தங்கி இருந்தேன். அப்போதுதான் மூர்த்தி என்ற ஆடை வடிவமைப்பாளரின் அறிமுகம் கிடைத்தது. கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ஆடை வடிவமைக்கும் கடையில்தான் எப்போதும் இருப்பேன். ’நூல்’ வாங்கித்தருவது என்று எல்லா வேலைகளையும் செய்வேன். சினிமாவில் இருக்கும் முக்கிய நபர்களின் தொடர்பு அங்கிருந்தால் கிடைக்கும் என்பதால், மூர்த்தி அண்ணன் கடையில் இருப்பது வழக்கம். ஒரு நாள் மூர்த்தி அண்ணா என்னிடம் ‘சினிமாவில் என்ன ஆகணும்’ என்று கேட்டார். நான் யோசிக்காமல் ’ஒளிப்பதிவாளர்’ என்றேன். உடனே அவர்  வில்லன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர்  சாந்தமூர்த்தியிடம் என்னை அறிமுகம் செய்தார்.
 
 
 சாந்த மூர்த்தி சார் என்னிடம் ‘ உன்னை சேர்த்துகொள்கிறேன். ஆனால் இப்போதைக்கு சம்பளம் கொடுக்க முடியாது’ என்றார். பணத்தைவிட எனது பயணத்தின் அவசியம் கருதி அவரிடம் சேர்ந்துகொண்டேன். இயக்குநராக வேண்டும் என்பது எனது கனவாக இருந்தாலும் ஒளிப்பதிவை தேர்வு செய்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. இயக்குநர் ஆகிவிட்டு ஒளிப்பதிவை கற்றுக்கோள்ள இயலாது. ஆனால் ஒளிப்பதிவாளராக இருந்தால் திரைப்படத்தை இயக்குவது எப்படி என்று  கற்றுக்கொள்ள முடியும். ஏற்கனவே ஐந்து உதவி ஒளிப்பதிவாளர்கள் இருந்தனர். ஆறாவதாக நானும் சேர்ந்துகொண்டேன்.
 
 
ஆடை வடிவமைப்பாளர் மூர்த்தி அண்ணின் பாசத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. ’செலவிற்கு காசு நான் தருகிறேன்... நீ அவரிடம் வேலையை கற்றுக்கொள்’ என்றார். அவர் தினமும் கொடுத்த 30 ரூபாய்தான் என்னை வாழ வைத் தது. இரண்டு வருடங்கள் என் செலவுகளை கவனித்துகொண்ட மூர்த்தி அண்ணா, மூன்று வேளை உணவும் கொடுத்தார். எனக்கு மட்டுமல்ல என்னைபோன்ற பலருக்கு அவர் அடைக்கலம் தந்துள்ளார். உதவுவதற்காகவே பிறந்தவர் என்று சொல்லலாம்.
 
 
 
வில்லன் படம் முடியும்போது எனக்கு சாந்த மூர்த்தி சார் நான் கேட்காமலேயே சம்பளம் கொடுத்தார். நான் முதலில் வாங்கிய சம்பளம் ரூ 1,500. இதைத்தொடர்ந்து அவர் ஒளிப்பதிவில் வெளியான அலை படத்திலும் உதவி ஒளிப்பதிவாளராக வேலை செய்தேன்.
 
 
அப்போது எனது நண்பர்  ரவிவர்மன் , விஜய் மில்டன் உதவி ஒளிப்பதிவாளரைத் தேடுகிறார் என்று சொன்னார். அப்போது விஜய் மில்டன் போஸ் படத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அந்த திரைப்படத்திலேயே என்னை உதவி ஒளிப்பதிவாளராக சேர்த்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவருடன் ’காதல்’, ’அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ ஆகிய படங்களில் வேலை செய்தேன்.
 
 
2010-க்கு பிறகு  மணிகண்டன் ஒளிப்பதிவு செய்த ’காக்கா முட்டை’, ’குற்றமே தண்டனை’ ஆகிய படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன். அதன் பிறகு நானே இயக்குநர் ஆக விரும்பி 2015ம் ஆண்டு சிகை படத்திற்கான கதையை எழுதினேன். சிறிய பட்ஜெட் படம். அதை வெளியிட திரையரங்கம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த காலத்தில் ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்கே இரு கோடிக்கு மேலாகவே தேவைப்படுகிறது. படத்தை எடுப்பதைவிட படத்தை திரையரங்கில் வெளியிட அதிக பணம் செலவாகிறது. இதனால் சிகை படத்தின் கதையை மாற்றி அமைத்து ஜீ5 மூலம் இணையத்தில் வெளியிட்டோம்.
 
 
2018ம் ஆண்டு பக்ரீத் கதையை எழுதினேன். ரத்தினம் என்ற கதாபாத்திரத்தின் குணங்களையும், ஒட்டகத்திற்கும் ரத்தினத்திற்குமான உறவையும் பற்றி விக்ராந்திடம் சொன்னேன். அது அவரை வெகுவாக ஈர்த்தது.
 
 
நடுவில் ஒன்றை சொல்ல மறந்துவிட்டேன். ஏழு வருடக் காதலுக்குப் பின் எனது மனைவியை கரம் பிடித்தேன். அவரின் காதல் எல்லையற்றது. பொருளாதார நெருக்கடியை இருவரும் சேர்ந்து சமாளித்தோம். மூன்று மாதங்கள்கூட தொடர்ந்து  வீட்டு வாடகை கொடுக்க இயலாத நிலைகூட ஏற்பட்டது. அப்போதுகூட என்மீது அவர் கோபம் கொள்ளவில்லை. எனக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். எனக்கும் மகளுக்கும் இருக்கும் நெருக்கம்தான் பக்ரீத் படத்தில் ரத்தினத்திற்கும் வாசுகிக்குமான கதாபாத்திரத்தை வடிவமைக்க உதவியது. அதுமட்டுமல்லாமல் ஒருமுறை வேலை நிமித்தமாக  மகாராஷ்டிராவுக்குச் சென்றபோது சரியான உணவில்லாமல் அவதிப்பட்டேன். 
 
 
அங்கு கிடைக்கும் ரொட்டியை நான்கு நாட்களுக்கு மேலாக சாப்பிட முடியவில்லை. வாழிடம் முக்கியமானது. இதை படத்திலும் பதிவு செய்திருக்கிறேன். இந்த அனுபவமும் பக்ரீத் கதையை செழுமைப் படுத்த உதவிற்று.  படத்தில் பசு பாதுகாவலர்களை தவறாக சித்திரிக்கும் நோக்கத்தில் காட்சிகளை அமைக்கவில்லை. அவர்கள்  வேலையை  அவர்கள் செய்கிறார்கள்.  எல்லா இடத்திலும் இளகிய மனம் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்த நினைத்தேன்.
 
 
அமேசான் காட்டுத் தீ செய்தி என்னை அதிகமாக பாதித்தது. எனது அடுத்த படம் இயற்கையை எப்படி மனிதன் சுரண்டுகிறான் என்பது குறித்துதான் இருக்கும்..” என்று சொல்லி முடித்தார் ஜெகதீசன் சுபு.
 

-வாசுகி (செப்டம்பர் 2019 அந்திமழை இதழில் வெளியானது)

 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...