அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

மூன்று மாதங்களாக காணாமல் போயிருக்கும் அலிபாபா உரிமையாளர்! எங்கே போனார்?

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   05 , 2021  17:08:03 IST


Andhimazhai Image

உலகின் 25-வது மிகப்பெரிய பணக்காரரான ஜேக் மா கடந்த மூன்று மாதங்களாக தனது வெளியுலக தொடர்பை துண்டித்துக்கொண்டிருக்கிறார். அலி பாபா நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து சமீபத்தில் விலகிய அவர், கடந்த சில மாதங்களாக செயல்படாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடைசியாக கடந்த 2020 அக்டோபரில் சீன நிதி ஒழுங்குமுறை அமைப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைத் தொடர்ந்து ஜேக் மா மீது பல்வேறு நெருக்கடிகள் செலுத்தப்பட்டிருக்கிறது. இதன்பிறகே அவர் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்டார் என சொல்லப்படுகிறது.

ஜேக் மாவின் அந்த சர்ச்சை பேச்சு அவருக்கு தொழில் ரீதியாகவும் பல்வேறு பின்னடைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது பங்குச் சந்தையில் கடுமையான சரிவை எதிர்கொண்டிருக்கிறார். விளைவாக, ஜேக் மாவின் இந்த தலைமறைவு படலம் தொடங்கியிருக்கிறது. தனது சொந்த தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் கூட அவர் பங்கேற்கவில்லை.

கிழக்கு சீனாவில் உள்ள ஹாங்சோவ் பகுதியில் ஒர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஜேக் மா. முதலில் இவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். தனது 33-வது வயதில் முதன்முதலில் கணினியை வாங்கிய அவர், கடந்த 20 ஆண்டுகளாக சீன பொருளாதாரத்தில் மின்னும் நட்சத்திரமாக விளங்குகிறார். அவருக்கு இத்தகைய வளர்ச்சியை தந்தது அவர் உருவாக்கிய இணைய வர்த்தக நிறுவனமான 'அலிபாபா'.

பின்னர் கடந்த 2019-இல் 'அலிபாபா' நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலகிக்கொண்ட ஜேக், கோவிட் தொற்று காலம் வரை பல்வேறு மக்கள் சேவை பணிகளில் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக்கொண்டார். அமெரிக்காவிற்கு முகக்கவசம், செயற்கை சுவாசக் கருவி போன்றவற்றை வழங்கியதன் மூலம் அந்நாட்டு அரசியல் தலைவர்களின் பாராட்டை பெற்றார். இளம் தொழில்முனைவோருக்கு ஜேக் நடத்திய திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் பெரிதும் உதவின.

இத்தகைய உயரத்தை அடைந்த ஜேக் மா கடந்த அக்டோபரில் சீன பொருளாதார ஒழுங்குமுறை  அதிகாரிகள் முன்னிலையிலேயே அந்நாட்டு நிதி ஒழுங்குமுறைகளை விமர்சித்து பேசினார். இது சீனாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்த, தற்போது ஜேக் நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டிருக்கிறார்.

நவம்பர் மாதமே ஜேக் மா குழுமத்தின் பங்குச் சந்தை முதலீடுகளில் சீன அதிகாரிகள் கைவைத்தனர். முதலீட்டாளர்கள் அதிருப்தியடைந்ததால் பங்குச் சந்தையில் அவருக்கு சரிவு ஏற்பட்டது. ஜேக் நிறுவனங்களில் சீன அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

தன் பத்தாயிரம் ஊழியர்களின் முன்னிலையில் மைக்கல் ஜாக்சன் போல ஆடை அணிந்து நடனம் ஆடியவர் ஜேக். அவ்வளவு சகஜமாக இருப்பவர் இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை. பொது நிகழ்ச்சிகள், மேடைகளில் பங்கேற்பதை மட்டுமின்றி, ட்வீட் செய்வதைகூட ஜேக் மா நிறுத்திக்கொண்டார். கடந்த மூன்று மாதங்கள் அவர் ட்வீட் பதிவை கூட வெளியிடவில்லை.

அலிபாபா நிறுவனம் மட்டுமின்றி பல்வேறு தொழில் முனைவுகளிலும் ஜேக் மா ஆர்வம் கொண்டிருந்தார். ஆண்ட் என்ற இணையவழி பணம் செலுத்தும் நிறுவன குழுமத்தில் பங்கு வகித்தார். ஜேக் இந்த வியக்கவைக்கும் வளர்ச்சியை எட்டுவதற்கு முன்பாக, அவர் 30 பணிகளில் நிராகரிக்கப்பட்டிருக்கிறார். அதில் ஒன்று கே.எப்.சியில்  சிக்கன் பரிமாறும் பணி. பின்னர் ஆசியாவின் முதல் பெரும் பணக்காரராக உயர்ந்தவர், மற்றொரு சீன தொழிலதிபரால் பின்னாளில் தோற்கடிக்கப்பட்டார். பிறகு அவரது சொத்து மதிப்பு ஜேக் மாவை உலகின் 25-வது மிகப்பெரிய பணக்காரராக உயர்த்தியது. இப்போது அவர் முற்றிலும் முடங்கியிருக்கும் சூழலில், அதனை முன்வைத்து கடந்த சில நாட்களாக மீண்டும் அவர் பரவலாக பேசப்படுகிறார். 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...