???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்ஸ்டாகிராமின் குறைபாட்டை கண்டறிந்த தமிழருக்கு ரூ. 20 லட்சம் பரிசு! 0 தெலங்கானாவில் மாதாந்திர ஓய்வூதியம் இரட்டிப்பானது! 0 அயோத்தி வழக்கு: இடைக்கால அறிக்கை தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம் 0 இன்று ஒகேனக்கலுக்கு வந்தடைகிறது காவிரி நீர் 0 நல்லகண்ணு, கக்கன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் 0 நடிகர் சந்தானம் பட டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வசனம்: தடை செய்ய மனு 0 அத்திவரதர் தரிசனத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி 0 புதுச்சேரி ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் மதிய உணவு: முதல்வர் நாராயணசாமி உத்தரவு 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   17 , 2019  23:11:13 IST

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மிகப் பெறும் வெற்றியைப் பெற்றநிலையில், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக மோடி தலைமையில் அக்கட்சி ஆட்சி அமைத்தது. பா.ஜ.க வெற்றி பெற்றநிலையில், மோடி தலைமையிலான அமைச்சரவையில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

பா.ஜ.கவின் நடைமுறைப்படி, அமைச்சர் பொறுப்பில் உள்ளவர்கள் கட்சியின் தேசிய, மாநிலத் தலைவர் பொறுப்பில் இருக்கமாட்டார்கள். அதன்படி, அமித்ஷாவுக்கு பதிலாக பா.ஜ.கவின் தேசியத் தலைவர் பொறுப்பை யார் ஏற்பார் என்று கேள்வி எழுந்தது. இந்தநிலையில், பா.ஜ.கவின் தேசிய செயல் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவரும் ஜே.பி.நட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘அமித்ஷாவின் தலைமையில் பா.ஜ.க பல தேர்தலிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், மோடி, அவரைத் தற்போது மோடி அவரை உள்துறை அமைச்சராக நியமித்துள்ளார். கட்சித் தலைவர் பொறுப்பை அமித்ஷா, வேறு ஒருவரிடம் ஒப்படைக்கக் கூறினார். பா.ஜ.க நாடாளுமன்றக் குழு, ஜே.பி.நட்டாவை தேசிய செயல் தலைவராக நியமித்துள்ளது’ என்று தெரிவித்தார். டிசம்பர் மாதம் வரை அமித்ஷாவே தலைவராக நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...