அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டங்களுக்கு முன் பலதரப்பிலும் ஆலோசனை நடத்தியதா? அரசு பொய் சொல்கிறது: ப.சிதம்பரம் விமர்சனம் 0 காலில் அறுவை சிகிச்சை.. சில நாட்கள் ஓய்வு தேவை - கமல்ஹாசன் 0 தமிழகத்தில் வீடில்லாத ஏழைகளுக்கு இலவச வீடு - முதலமைச்சர் 0 வாராக் கடன்களை சமாளிக்க BAD BANK திட்டம் - ரிசர்வ் வங்கி 0 நார்வேயில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 23 பேர் உயிரிழப்பு 0 ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்குக: மு.க. ஸ்டாலின் 0 ஆட்சி செய்பவர்கள் ஏன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை? காங். எம்.பி கேள்வி 0 சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை: அமைச்சர் தகவல் 0 தடுப்பூசி போட்டுக் கொண்ட 2783 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை : அமைச்சர் விஜயபாஸ்கர் 0 “கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்” - முதலமைச்சர் பழனிசாமி “கொரோனா 0 கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 0 தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி 0 மத்திய அரசு - விவசாயிகள் இடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி 0 பொங்கல்: உச்சம் தொட்ட டாஸ்மாக் மது விற்பனை! 0 அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நன்கொடை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

தனியார் பாதுகாப்பை வைத்துக்கொள்வதாக நீதிமன்றத்தில் ஜெ.தீபா தகவல்

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   03 , 2020  23:16:14 IST

தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டாமெனவும், தனியார் பாதுகாப்பை வைத்துக் கொள்வதாகவும் ஜெ. தீபா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவின் சகோதரர் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக்கை சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவித்து, 188 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை வழங்கியது.
 
அத்துடன், அவர்களின் சொந்த செலவில் அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி,எம்.எஸ் ரமேஷ் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் பாப்பையா, தீபா, தீபக்கிற்கு பாதுகாப்பளிக்க காவல்துறை தயாராக உள்ளதாகவும், அதற்கான முன்பணமாக இருவரும் சேர்ந்து 6 மாதத்திற்கு 20.83 லட்சத்தை செலுத்துமாறு காவல்துறை ஆணையர் சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பே கடிதம் அனுப்பியும், இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என தெரிவித்தார்.
 
தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறை கடிதத்துக்கு பதில் அளிக்க இருப்பதாக தெரிவித்த நிலையில், தீபா தரப்பு வழக்கறிஞர், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டாமெனவும், தனியார் பாதுகாப்பை அமர்த்தி கொள்வதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து இருதரப்பு வாதத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...