???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தி.மு.க. ஊழல் கட்சியா?: எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்ந்து நீடிப்பார்: அமித் ஷா 0 ரஃபேல் ஒப்பந்தம்-பாதுகாப்பு துறையில் நடந்த மிகப்பெரிய ஊழல்: பிரசாந்த் பூஷண் 0 கருணாஸ் கைது குறித்து சபாநாயகரிடம் முறைப்படி போலீசார் இன்று தகவல் 0 செல்போன் திருடியதாக கரூரில் சிறுவன் அடித்துக் கொலை! 0 கருகிய பயிர்களைக் கண்டு நாகையில் இரண்டு விவசாயிகள் தற்கொலை 0 கருணாசுக்கு ஒரு சட்டம்; எச்.ராஜா - எஸ்.வி.சேகருக்கு ஒரு சட்டமா?: ஸ்டாலின் கேள்வி 0 முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: எம்.எல்.ஏ கருணாஸ் கைது 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வண்ணதாசனுக்கு இயல் விருது – 2017

Posted : திங்கட்கிழமை,   ஜனவரி   08 , 2018  03:37:03 IST


Andhimazhai Image

 

 

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் வருடாந்திர இயல் விருது (2017) இவ்வருடம்  வண்ணதாசன்  அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வண்ணதாசன் என சிறுகதைகள் மூலமும், கல்யாண்ஜி என கவிதைகள் மூலமும் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படும் எஸ். கல்யாணசுந்தரம் (1946) பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மூத்த எழுத்தாளர் தி.. சிவசங்கரன் அவர்களின் மகன். தமிழ்நாட்டின் திருநெல்வேலியை பிறப்பிடமாகக் கொண்டவர்.

60-களில் எழுதத் தொடங்கிய வண்ணதாசன் இதுவரை 15 சிறுகதை தொகுப்புகள், 16  கவிதைத் தொகுப்புகள், 2 கட்டுரை தொகுப்புகள், ஒரு புதினம் என படைத்துள்ளார்.  இவருடைய தேர்ந்தெடுத்த கவிதைகளின் குறுந்தகடு இவர் குரலிலேயே வாசிக்கப்பட்டு வெளிவந்துள்ளது. `எல்லோர்க்கும் அன்புடன்எனும் பெயரில் இவரது கடிதங்கள் தொகுக்கப்பட்டு இரண்டு நூல்களாக  வந்துள்ளன. நவீன தமிழ்ச் சிறுகதை ஆக்கத்தில் அதிக கவனம் பெற்றுள்ள இவருடைய படைப்புகள் பல்கலைக்கழகத்தில் பாடமாகவும் வைக்கப்பட்டிருக்கின்றன.

வாழ்வின் ஓரத்தில் உட்கார்ந்து அதன் மையத்தை உற்று நோக்குவதுபோல சிறுகதைகள் அமைப்பது இவரது சிறப்பு. அன்றாடம் கண்ணுக்கு படும் இயற்கை காட்சிகளும், சாதரண மனிதர்கள் அனுபவிக்கும் சிக்கல்களும், அவர்களுக்கு ஏற்படும் அசாதாரண சம்பவங்களும் இவர் கதைகளில் வந்து போவதை காணலாம். ‘வாசகனிடம் பெற்றதை அவனுக்கே திரும்ப நீண்ட கடிதமாக எழுதுகிறேன்என்று அவர் தன் படைப்பை பற்றிக் கூறுகிறார்.

சாகித்திய அகாடமி விருது, சிற்பி விருது, பாவலர் விருது, விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விருது மற்றும் தமிழக அரசு வழங்கிய கலைமாமணி  விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்இயல் விருதைப் பெறும் 19-வது தமிழ் இலக்கிய ஆளுமை இவர் ஆவார். இதற்கு முன்னர் சுந்தரராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன், சு. தியோடர் பாஸ்கரன், ஜெயமோகன், டொமினிக் ஜீவா, ஆர். மயூரநாதன்  மற்றும் கவிஞர் சுகுமாரன் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் என தொடர்ந்து இயங்கி வருபவரும், இலக்கியவாதிகளாலும், வாசகர்களாலும்  பெரிதும் மதிக்கப்படுபவருமான வண்ணதாசன்  அவர்களுக்கு , 2017-ஆம் ஆண்டுக்கான இயல் விருதை வழங்குவதில் தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமை கொள்கிறது.  2500 டொலர் பணப்பரிசும் விருதுக் கேடயமும் கொண்டது இயல் விருது.  டொராண்டோவில் 2018 ஜூன் மாதம் இயல் விருது வழங்கும் விழா   நடைபெறும்.


English Summary
Iyal award to vannadasan

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...