???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் 0 கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு 0 கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு 0 கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை! 0 கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் 0 விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு 0 கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி 0 கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு 0 கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல்! 0 கேரளமக்களுக்கு உதவுவது எப்படி? 0 கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பிரதமர் ஆய்வு 0 வாஜ்பாய் மறைவு: மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு 0 முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி 0 முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இயல் விருது விழா - நான் சின்னச் சின்ன விசயங்களால் ஆன மனிதன்: வண்ணதாசன்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   12 , 2018  02:23:39 IST


Andhimazhai Image
தமிழ் படைப்புலகின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவரான வண்ணதாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான இயல் விருது வழங்கப்பட்டது. 
 
 
2500 டாலர்கள் பணப்பரிசும், பாராட்டுக்கேடயமும் கொண்ட இயல் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பால் ஆண்டுதோறும் தமிழ் இலக்கியத்தில் சாதித்த படைப்பளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  இந்த வருடம் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ஞாயிற்றுக்கிழமை 10 ஜூன் 2018 அன்று ஆறு மணிக்கு டோரொண்டோவில் நடைபெற்றது.
 
 
கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள்  மூலம் 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் இயங்கிவரும் திரு கல்யாணசுந்தரம் சிவசங்கரன் (வண்ணதாசன்) அவர்களுக்கு தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையான இயல் விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து  ’வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவலுக்கான புனைவுப் பரிசு தமிழ்மகனுக்கு வழங்கப்பட்டது. அபுனைவுப் பரிசு ’கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வளமும்’ என்ற நூலுக்காக பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களுக்கும், கவிதைப் பரிசு ’அம்மை’ கவிதை தொகுப்புக்காக பா. அகிலன் அவர்களுக்கும், மொழிபெயர்ப்பு பரிசு ’பாலசரஸ்வதி ; அவர் கலையும் வாழ்வும்’ நூலுக்காக டி.ஐ. அரவிந்தனுக்கும், ஆங்கில இலக்கியப் பரிசு அனுக் அருட்பிரகாசத்துக்கும் வழங்கப்பட்டது.
 
 
சுந்தர ராமசாமி நினைவு கணிமை விருது சசிகரன் பத்மநாதனுக்கும், மாணவர் கட்டுரைப் போட்டி பரிசு செல்வி சங்கரி விஜேந்திராவுக்கும் வழங்கப்பட்டது. தமிழ் இலக்கிய சிறப்பு பரிசுகள் தி. ஞானசேகரனுக்கும், கலாநிதி நிக்கோலப்பிள்ளை அவர்களுக்கும், வழங்கப்பட்டது. கவிஞர் செழியன் நினைவு பரிசை திருமதி துளசி சிவகுமாரன் பெற்றுக்கொண்டு நெகிழ்ச்சியான உரையாற்றினார்.  விழாவின் முதன்மை விருந்தினர்களாக தண்ணீர் திரைப்படப் புகழ் தீபா மேத்தா மற்றும் நியூ யோர்க் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிய முனைவர் பாலா சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.  
 
 
இயல் விருதைப் பெற்றுக்கொண்ட வண்ணதாசனின் ஏற்புரை சுருக்கமாகவும், அடர்த்தியானதாகவும் அமைந்தது. ‘சின்னச் சின்ன விசயங்கள் என்னை ஈர்க்கின்றன. பிரம்மாண்டமான நயாகரா அருவியில் நான் கண்டது உயரமாகப் பறந்த சிறிய பறவையைத்தான். நான் சின்னச் சின்ன விசயங்களால் ஆன மனிதன்’ என்று சபையோரின் பலத்த கைதட்டல்களுக்கிடையே வண்ணதாசன் உரை ஆற்றினார். விழாவில் வண்ணதாசனின் ‘அந்தரப்பூ’ கவிதை தொகுப்பு வெளியிடப்பட்டது. ஆவணப்பட இயக்குநர், பேராசிரியர் சொர்ணவேல் வெளியிட அதை அ.முத்துலிங்கம் பெற்றுக்கொண்டார். கல்வியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும், கனடியத் தமிழர்களும் பெருந்திரளாக விழாவுக்கு வருகை தந்து சிறப்பித்தனர். 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...