???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரானோ: தமிழகம் 1458; சென்னை 1146! 0 கொரோனாவுக்கு தாவூத் இப்ராஹிம் பலியா? 0 கொரோனா: தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் நிர்ணயித்து அரசு உத்தரவு! 0 சென்னையில் ஒரு லட்சம் பேருக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு! மருத்துவர் ராமதாஸ் அறிக்கை 0 ஜூலை 15-ந்தேதி தமிழகத்தில் 3.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும்: ஆய்வில் தகவல் 0 இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற கனடா பிரதமர் 0 மருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு இடஒதுக்கீடு கோரி விசிக 8-ம் தேதி போராட்டம்! 0 பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்: மத்திய பள்ளி கல்வித்துறை 0 சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கண்காணிக்க 5 அமைச்சர்கள் 0 மேனகா காந்தி மீது வழக்குப் பதிவு! கேரள போலீஸ் நடவடிக்கை! 0 கீழடி அருகே கொந்தகையில் மண்டை ஓடுடன் எலும்புகள் கண்டுபிடிப்பு 0 மக்களிடம் 'மங்காத்தா' போல் மின்கட்டண வசூல் செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது: மு.க. ஸ்டாலின் 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்

Posted : சனிக்கிழமை,   மே   23 , 2020  00:25:30 IST

அரியானாவின் குர்கன் நகரிலிருந்து காயமடைந்த தனது தந்தையை சைக்கிளில் அமரவைத்து 15 வயதான சிறுமி ஜோதி குமாரி 1,200 கி.மீ  10 நாட்களில் சொந்த மாநிலமான பீகாருக்கு அழைத்து வந்து பிரமி்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்தவாரம் மூழுவதும் சமூக வலைதளங்களில் இந்த சிறுமி தனது தந்தையை சைக்கிளில் அமரவைத்து சொந்தமாநிலம் அழைத்து வந்தது டிரெண்டிங் ஆனது.

தற்போது இந்திய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பு லாக்டவுன் முடிந்தபின் பயிற்சிக்கு அழைத்துள்ளது.

ஜோதி குமாரி சைக்கிள் ஓட்டும் திறமை குறித்து அறிந்த தேசிய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பின் தலைவர் ஓங்கர் சிங், லாக்டவுன் முடிந்தபின் அவரை டெல்லிக்கு பயிற்சிக்காக அழைத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகள் மற்றும் ஆலோசகர் இவான்கா டிரம்ப் ஜோதி குமாரியின் செயலை பாராட்டி உள்ளார்.

"15 வயது ஜோதி குமாரி, தனது காயமடைந்த தந்தையை 7 நாட்களில் +1,200 கி.மீ தூரம் தனது சைக்கிளின் பின்புறத்தில் வைத்து தங்கள் சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்று உள்ளார்.  சகிப்புத்தன்மை மற்றும் அன்பின் இந்த அழகான சாதனை, சைக்கிள் கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது என கூறி உள்ளார்.

இவான்காவுக்கு பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா "ஜோதி 1,200 கி.மீ தூரம் பயணம் செய்ததைப் போல அவரது வறுமையும் விரக்தியும் மகிமைப்படுத்தப்படுகின்றன. அரசாங்கம் அவரிடம் தோல்வியுற்றது, இது ஒரு சாதனையாக எக்காளம் போடுவதற்கு ஒன்றும் இல்லை என கூறினார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...