செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
நிதி முறைகேடு அதிபர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்பிடம் விசாரணை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகள் இவான்காவிடம் நிதி முறை கேடு தொடர்பான வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது அமெரிக்க…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
நிதி முறைகேடு அதிபர் டிரம்பின் மகள் இவான்கா டிரம்பிடம் விசாரணை
Posted : வியாழக்கிழமை, டிசம்பர் 03 , 2020 23:37:43 IST
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகள் இவான்காவிடம் நிதி முறை கேடு தொடர்பான வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது அமெரிக்க அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் டிரம்பின் பதவியேற்பு விழாவின் போது திரட்டப்பட்ட நிதி சுமார் ரூ.790 கோடியில் இருந்து குறிப்பிட்ட தொகை தவறாக பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தொகையானது அதிபர் டிரம்பின் தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், அதில் இருந்து டிரம்ப் குடும்பம் ஆதாயம் தேடியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள டிரம்ப் ஓட்டலானது, அரசு தொடர்பான கூட்டங்களுக்கு அதிக கட்டணம் வசூலித்ததாகவும், பெரும்பாலான கூட்டம் நிர்பந்தம் காரணம் டிரம்ப் ஓட்டலில் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இவை அனைத்தையும் நிர்வகித்த இவான்கா டிரம்ப், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டது என விமர்சித்துள்ளார்.
பொதுமக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் அரசியல் பழிவாங்கும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகை இதுவரை எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.
|