???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 0 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு! 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை அறிக்கை தாக்கல்

Posted : வியாழக்கிழமை,   ஜனவரி   10 , 2019  22:42:52 IST

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சீலிட்ட கவரில் வைத்து, வருமான வரித்துறை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
 
ஆர்.கே. நகர், பணம் பட்டுவாடா புகார் தொடர்பான விசாரணையை சிபிஐ'க்கு மாற்ற வேண்டும் என தி.மு.க. வேட்பாளர் மருது கணேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் மற்றும் தலைமை இயக்குனர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 2017 ஏப்ரல் 7 ஆம் தேதி விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் 4,71,00,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை சீலிட்ட கவரில் வைத்து, வருமான வரித்துறை தாக்கல் செய்தது.
 
அந்த ஆவணங்களை தங்களுக்கும் வழங்குமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து வரும் 18ம் தேதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள் அன்றைய தினத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...