???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 1438; சென்னை1116! 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-3 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-2 0 ஜெயமோகன் நடத்திய சிறுகதைத்திருவிழா! வானவெளியில் மாயக் கம்பளப் பயணம்! பகுதி-1 0 முதலீடு செய்ய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு 0 இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியது 0 தெலுங்கானாவில் 32 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி 0 கடுமையான ஊரடங்கு பொருளாதாரத்தை அழித்து விட்டது: ராஜீவ் பஜாஜ் கருத்து 0 திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் 0 சென்னையில் 5 மண்டலங்களை காப்பதில் முழு சிந்தனை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 மத்திய குழு தமிழகம் வருகை: சென்னை உள்பட 7 மாவட்டங்களில் ஆய்வு 0 கொரோனா இன்று- தமிழகம் 1384, சென்னை 1072! 0 தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை கட்டணம் எவ்வளவு? 0 ஜூனியர் என் டி ஆரைப் பிடிக்காது என்று சொல்வதா? நடிகை நிலாவுக்கு மிரட்டல்! 0 'மாஸ்டர்' பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும்!! - பட அதிபர் கேயார் வேண்டுகோள்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இசைவிழா குறிப்புகள் -1

Posted : ஞாயிற்றுக்கிழமை,   டிசம்பர்   21 , 2014  23:31:09 IST


Andhimazhai Image

திருவான்மியூரில் உள்ள பனுவல் புத்தக நிலையத்தின் அரங்கிலும் அந்திமழை மாத இதழுடன் இணைந்து இந்த ஒரு வாரம்முழுக்க இசைவிழா ஏற்பாடு செய்துள்ளார்கள். முதல் நாள் நிகழ்ச்சியில் ரசித்தவை:

‘இசை கேட்கப்படுவதற்காக. ரசிக்கப்படுவதற்காக. இசை பற்றிய ஆய்வுகளும் கருத்தரங்குகளும் செய்யப் படவேண்டியது ஒரு சமூகத்தின் கடமை. அந்த சமூகத்தின் தத்துவம், சிந்தனை முறை, சமய கருதுகோள்கள் ஆகியவையே அச்சமூகத்தின் இசை வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன. கலை என்பது ஒரு கண்ணாடி. சமூகம் தன்னைத் திரும்பிப் பார்க்க உதவக்கூடியது. அதற்கு இதுபோன்ற ஆய்வரங்குகள் தேவை’’ மிக கனமான கருத்துடன் இசைக் கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார் ராமானுஜன் படத்தின் இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம். வெகுநேரம் அமர்ந்திருந்து மற்றவர்கள் பேச்சையும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் இசைத்துறைப் பேராசிரியர் பிரமீளா குருமூர்த்தி ஒரு இசை ஒலிப்பானையும் கொண்டுவந்திருந்தார். சிதம்பரம் ஜெயராமனின் திரை இசைச் சிறப்புகள் பற்றிப் பேசினார். இடையிடையே  இனிய குரலில் பாடினார். இசை ஒலிப்பானில் ஜெயராமனின் இனிய குரலினால் ஆன பாடல்களை ஒலிக்கவிட்டார். சில பாடல்களை ஒலி குறைத்து அந்த பின்னணியில் தன் பேச்சையும் தொடர்ந்தார்.

இலங்கையில் கொழும்புவில் வாழ்ந்த குடும்பம் பிரமீளாவுடையது. அவரது அப்பா புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளர். இலங்கைக்கு 1967ல் சிதம்பரம் ஜெயராமன் வந்தபோது இவர்கள் வீட்டில் அவரைப் பாட வைத்தார்கள். ஏனெனில் அயல்நாட்டுப் பாடகர்களை நிகழ்ச்சிகளில் பாட வைக்க கொஞ்சகாலம் தடை இருந்த காலம் அது. சுமார் 150 பேர் வந்திருந்தார்கள். மிக அருமையாக நிகழ்ந்தது கச்சேரி. அப்போது சுவர் ஏறிக் குதித்து ஒருவர் உள்ளே வந்துவிட்டார். அவரைப் பிடித்து விசாரித்தால், ’குற்றம் புரிந்தவன் வாழ்விலே நிம்மதி என்பதேது?’ என்ற பாட்டு ரொம்பப் பிடிக்கும். அதைக் கேட்க வந்தானாம். ( அதற்காக சுவர் ஏறிக்குதிக்கும் குற்றம் புரிந்தானா? என கமெண்ட் அடித்தார் ரமேஷ் விநாயகம்).

தனக்கு சின்ன வயதில் பாடகர் ஜெயராமன் சொல்லிக் கொடுத்த சில பாடல்களை நினைவுகூர்ந்த பிரமீளா குருமூர்த்தி அவர் தனக்குக் கூறிய அறிவுரைகளாக சிலவற்றைக் கூறினார்.
‘தொண்டையைப் பாதுகாக்கணும்னு எதையும் சாப்பிடற பழக்கம் வேண்டாம். தரையில் படு. காலையில் நாலுமணிக்கு எழுந்து சாதகம் பண்ணு’ என்றார். நான், மாமா நீங்க எப்போ ஊருக்குப் போறீங்க? ன்னு நினைச்சுட்டேன்.’


ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியே..
மஞ்சள் வெயில் மாலையிலே...
இன்று போய் நாளை வாராய்...போன்ற அழியாப் புகழ்பெற்ற பாடல்கள் சி.எஸ்.ஜெவுக்கு சொந்தம்.


மஞ்சள் வெயில் மாலையிலே டூயட் பாடல் ஒலிக்க வைக்கும்போது அவருடன் ஒலித்த பெண்குரல் யாருடையது? என்ற கேள்வி எழ, ரமேஷ் விநாயகம் பி.லீலா என்றார். 1000 ரூபாய் பெட் என்றார். பார்வையாளர் ஒரு எம்.எல்.வி. என்றார். கடைசியில் எம்.எல்.வீயேதான்!

பேராசிரியர் பிரமீளாகுருமூர்த்தி பேசி முடித்து அமர்ந்ததும், பார்வையாளர் ஒருவர், சி.எஸ்.ஜெக்கு இசைசித்தர் என்ற பெயர் உண்டு என்ற கருத்தைப் பதிவு செய்தார்.

அருட்தந்தை அமலதாஸ் கிறிஸ்துவ இசை என்ற தலைப்பில் பேசவந்தார். அவர் குரலே இசைபோல் இனிமையாக இருந்தது. அவரது பேச்சில் கிறிஸ்துவ இசை முன்னோடிகளான வேதநாயகம் சாஸ்திரி, சின்னசாமி முதலியார், ஆபிரஹாம் பண்டிதர் போன்ற பெயர்களைக் குறிப்பிட்டார். இசையை மெய்யியல் நோக்கில் பார்த்து வரையறை செய்த அவர் கடைசியில் இசைக்கு மதமோ மொழியோ இல்லை. அதை வெறும் இசையாகப் பாருங்கள். கிறிஸ்துவ கத்திரிக்காய், இந்து தேங்காய் என்று எதும் இல்லை என்பதுபோல இசையிலும் எந்த பிரிவினையும் இல்லை என்று வலியுறுத்தினார்.

முனைவர் பார்த்திபராஜா ஸ்பெஷல் நாடகங்களில் இசை என்ற தலைப்பில் மிக அருமையான தகவல்களுடன் உரை நிகழ்த்தினார். அரிச்சந்திரா நாடகப் பாடல்களை அவர் பாடுகையில் அவரது குரல்வளமும் ஆளுமையும் ஆச்சரியப்படுத்தின. ‘வள்ளித் திருமணத்தில் தினைபுனம் காக்கும் வள்ளியும் அங்கே மான் வந்ததா எனக்கேட்கும் முருகனும் பாடித் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். வள்ளியாக நடிப்பவர் மான் வரவே இல்லை என்று சாதிப்பார். உன் மானின் அடையாளம் என்ன என்று அவர் கேட்டால்தான் முருகனாக நடிப்பவர் காயாத கானகத்தே.... பாடமுடியும். பல இடங்களில் இரவு முழுக்க வள்ளி மானின் அடையாளம் என்ன என்று கேட்கவே மாட்டார். முருகன் படாத பாடுபடுவார். கடைசியில் விடிந்துவிடும் நிலையில்தான் வள்ளி போனால்போகட்டும் என்று மானின் அடையாளம் கேட்பார்...’


‘ஹார்மோனியம் வைத்துப்பாடும் கலைஞர்களும் புகழ்பெற்று விளங்கினர். பரமேஸ்வர ஐயர், கமலவேணி அம்மா, டி.எம்.காதர் பாஷா ஆகியோர் குறிப்பிடவேண்டியவர்கள். இதில் காதர் பாஷா பற்றி ஒரு சுவாரசியமான வாய்மொழித் தகவல் உண்டு. அவரது தேசபக்திப் பாடல்களால் கோபமடைந்த ஆங்கிலேயர் அவரை பொய்க்குற்றச்சாட்டில் கைது செய்து சிறையில் அடைத்து தூக்குத் தண்டனை வாங்கித் தந்தனர். தூக்கில் போடுவதற்கு முன்னால் கடைசி ஆசை என்ன என்று கேட்டனர். ஹார்மோனியம் கொண்டு இசைத்து பிரார்த்தனை செய்யவேண்டும் என்றார். கொடுக்கப்பட்டது. சுருளிமலை மேல் உலாவும் சூலா என்ற பாடலைப் பாடினார். அவர் பாடப்பாட அனைவரும் மெய்மறந்தனர். தூக்குப்போட வேண்டிய நேரம் நன்கு கடந்துவிட்டது. எனவே அவரை மீண்டும் நீதிபதியிடம் ஆஜர் செய்து மறு தூக்குக்கு நேரம் கோரினர். நீதிபதி தூக்கில் போடாததன் காரணம் வினவினார். சொல்லப்பட்டது. தனக்கு அந்த பாடலைப் பாடிக்காட்டச் சொன்னார். கூண்டில் இருந்த வண்ணம் பாஷா பாடினார். நீதிமன்றமே உருகி வழிந்தது. இவ்வளவு உருகிப் பாடும் இவர் குற்றவாளியாக இருக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.’’


பார்த்திபராஜா பேசி முடித்ததும் பார்வையாளர்கள் நடுவில் இருந்து ஒரு மூன்று வயது மழலைப் பையன்... ‘அப்ப்ப்ப்பாஆ.. அங்கிள் நல்லா பேசினான்...’ என்று உரக்க தன் அபிப்ராயத்தை வெளிப்படுத்தினான். இதுதான் மிகச்சிறந்த பாராட்டு என நிகழ்வை ஒருங்கிணைத்த தமிழ் இசை ஆய்வாளர் மம்மது பெருமை அடைந்தார்.

மம்மதுவின் பேச்சில் வழக்கம்போல ஆழமான கருத்துகள், சூடான விமரிசனங்கள். அருமையான பாடகர்களான பிரமீளா குருமூர்த்தியும் பார்த்திபராஜாவும் பாடுகையில்  சுருதி வைத்துக்கொள்ளாமல் பாடினார்கள். அது தப்பு என்றார். அப்புறம் சுருதி வைத்துப் பாடுவது பற்றி விளக்கினார். இதற்காக மிக எளிதாக சிலப்பதிகாரம் வரை போய் திரும்பினார். மணாளனே மங்கையின் பாக்கியம் படத்தில் ஒரு பாட்டுக்கு மூன்று மாதமாக ஆதிநாரயண ராவ் இசை அமைத்த கதையை சுவாரசியமாகச் சொன்னார். இரட்டை தம்புரா சுருதியில் கேவி.மகாதேவனால் இசை அமைக்கப்பட்ட அமுதும் தேனும் எதற்கு என்ற பாடலின் கதையைச் சொன்னார்.  மக்களுக்காக, மக்களைப் பாடாத எந்த இசையும் மக்களிடம் போய்ச்சேராது என்றார் முத்தாய்ப்பாய்.

சிறப்பான செவிக்குணவாக அமைந்தது இசை விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி.


-சூரி


 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...