???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'இருட்டு' விமர்சனம்

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   06 , 2019  03:49:53 IST


Andhimazhai Image
சிகாபுரா அள்ளி எனும் மலைப்பகுதியில் மர்மமான முறையில் ஆறு பேர் கொல்லப்படுகிறார்கள். அதனை விசாரித்த போலீஸ் அதிகாரியும் இறக்கிறார். பிறகு இந்த வழக்கை விசாரிக்க வரும் சுந்தர்.சி மற்றும் அவரது குடும்பத்தினரும் இந்த மர்ம முடிச்சுக்குள் சிக்குகிறார்கள். பின்னர் அமானுஷ்ய சக்திகொண்ட அந்த நபர் யார், எதற்காக அந்த ஊரில் இருப்பவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதை திகில் பாணியில் சொல்லும் படம் தான் 'இருட்டு'.
 
பகல் நேரத்திலேயே திடீரென அந்த மலை கிராமத்தில் இருட்டு பரவுகிறது. எதோ அமானுஷ்ய சக்தியின் மூலம் சிலர் கொல்லப்படுகிறார்கள். வீடுகளில் இருக்கும் மரப்பொருட்களை கரையான் அரித்துவிடுகிறது. கொலைகள். அமானுஷ்ய சக்தி தொலைபேசி மூலமாகவும், வேறொருவரின் உருவத்திலும் வந்து மிரட்டுகிறது. இப்படியான சூழலில் இவை குறித்து சுந்தர்.சி விசாரணை செய்கிறார்.
 
ஒருகட்டத்தில் அந்த பேய் சுந்தர்.சி மனைவியின் உருவத்திலேயே வந்து அவரை ஏமாற்றுகிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தையையும் வசீகம் செய்து அவள் உடலில் புகுந்துவிடுகிறது. எதற்காக இதெல்லாம் நடக்கிறது என புரியாமல் சுந்தர்.சி உட்பட போலீஸார் குழம்புகின்றனர். பேயின் அட்டூழியம் அதிகமாக, அதனை விரட்ட முயற்சிக்கும் இசுலாமிய மாந்திரீகர் மௌரியாரும் கொல்லப்படுகிறார். இறக்கும் முன்னர் அந்த மாந்திரீகர் பேயை பற்றி ஒரு குறிப்பை தன் உடலில் வைத்துவிட்டு சாகிறார். அதை வைத்து அந்த பேய் யார்? எதற்காக சிகாபுரா அள்ளி எனும் அந்த ஊரை அழிக்க துடிக்கிறது? என்பதை கண்டுபிடித்து முடிவை தருகிறார் சுந்தர்.சி.
 
வழக்கமான திகில் பட பாணி என்றாலும், பேயின் பின்புலத்தை வித்தியாசமாக அமைத்து இதனை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் V.Z. துரை. அருமையான ஒரு மலைப்பிரதேசத்தில் கதைக்களம் அமைத்தது இப்படத்துக்கு முக்கிய பலம். மலை கிராமத்தின் தட்பவெட்ப நிலையை அதே ஈரத்துடன் உணரும் வகையில் ஒளிப்பதிவாளர் காட்சிப்படுத்தியிருக்கிறார். 
 
சுந்தர்.சி, சாக்ஷி சவுத்ரி, தன்ஷிகா, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். எனினும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு எந்த கதாபாத்திர வார்ப்பும் படத்தில் இல்லை. தனது காட்சிகளின் வாயிலாக பேயின் தீவிரத்தை காட்டியிருக்கிறார் தன்ஷிகா. ஷாஜி சென் பாத்திரம் சரியாக கையாளப்பட்டிருக்கிறது. ஒருவேளை, பேயின் பின்புலத்தை விளக்கும் அவரது காட்சி தடுமாறியிருந்தால் 'அட அவ்வளவுதானா' என்றே அளவிலேயே படம் முடிந்துபோயிருக்கும். 
 
திகிலான காட்சியமைப்புகளுக்கு சப்தமும், பின்னணி இசையும் வலுசேர்த்திருக்கின்றன. திரைக்கதை அவ்வளவு அழுத்தமாக இல்லையென்றாலும் அயற்சியளிக்கவில்லை என்பது ஆறுதல். இறுதிவரை மெனக்கிட்டு இழுத்துவந்த சுவாரஸ்யமும், லாஜிக்கும் கிளைமாக்சில் சிறிது ஆட்டம் கண்டது. கதாபாத்திர உருவாக்கம், மேக்கிங்கில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் 'இருட்டு' இன்னும் பயங்கரமாக மிரட்டியிருக்கும்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...